புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ்தொற்றின் 2-ஆவது அலை தீவிரமாகி நாள்தோறும் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் பேர் உயி
ரிழந்து வருகின்றனர். புதிதாக தொற் றால் பாதிக்கப்படும் மக்களுக்குப் போதுமான ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருந்துகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர்.
இந்த நிலையில், 2-ஆவது அலையோடு பிரச்சனை முடிந்து விடும் என்று இருந்து விடக் கூடாது; 3-ஆவது அலைக்கும் இப்போதே தயாராவோம் என்று மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவன் எச்சரிக்கை செய்துள்ளார்.தில்லியில் புதனன்று சுகாதார விவகார அமைச்சகம் சார்பில் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்த கே. விஜய் ராகவன், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது கொரோனாவைரஸ் தொற்றின் 2-ஆவது அலையை எதிர்த்து நாம் போராடி வருகிறோம். நாடு தற்போது எதிர்கொள்ளும் இத்தகைய மூர்க்கத்தனமான நீண்ட அலை முன்னதாக கணிக்கப்படவில்லை. இதில், மூன்றாவது அலை வருவதையும் நாம் தவிர்க்க முடியாது. தொற்றுப்பரவல் அதிகமான அளவில் இருப்பதால், எப்போது 3-ஆவது அலை வரும்என்பதை நாம் தெளிவாகக் கூற முடியாது. இருப்பினும் நாம் புதிய 3-ஆவதுஅலைக்கும் தயாராக இருக்க வேண் டும். கொரோனா தொற்றின் மூல வைரஸ் எவ்வாறு பரவியதோ அதே அடிப்படையில்தான் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸும் பரவுகிறது.
ஒரு மனிதரை பாதித்து அதன் மூலம் தன்னைப் பெருக்கிக் கொண்டு அடுத்தடுத்து அவை பரவி வருகின்றன. முதலில் உருவான கொரோனா வைரஸைவிட, உருமாற்றம் அடைந்த வைரஸ்கள், மக்களுக்கு அதிகமான அளவில் பரவக் கூடியதாக இருக்கிறது.இந்தியாவில் காணப்படும் B1.1.7 விகாரி வைரஸ் ஒரு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இதுவரை அது ஆன்டிபாடி அல்லது தடுப்பூசியைத் தாண்டி வேலை செய்வதைக் காட்டவில்லை. சார்ஸ் COV2 இன் B.1.1.7 பரம்பரை வைரஸ் நாட்டில் குறைந்து வருவதாக ஆரம்பத் தரவு காட்டுகிறது.
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்வரவுள்ளகொரோனாவின் புதிய உருமாற்றங் கள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். அவற்றை எதிர்க்க, முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு தீவிரஆராய்ச்சி திட்டமான இது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடந்து வருகிறது.புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் உலகம் முழுவதும் உருவாகலாம். இந்தியாவிலும் உருவாகலாம். உருமாற்றம் அடைந்த வைரஸ்களால் பரவலும் அதிகரிக்கும். எனவே அவற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். தற்போதுள்ள உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராக நாட்டில் இதுவரை அங்கீ
கரிக்கப்பட்ட கோவிஷீல்ட், கோவாக்சின்மற்றும் ஸ்பூட்னிக் ஆகிய மூன்று தடுப்பூசிகளும் பயனுள்ளதாக இருக்கின்றன.இவ்வாறு விஜய் ராகவன் கூறியுள்ளார்.