india

img

தேர்தல் ஆணையத்தை கலைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்....

புதுதில்லி:
தொடர் புகார்களுக்கு உள்ளாகியுள்ள தற்போதைய ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போன்றே, தற்போது நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. பாஜகவுக்கு சாதகமாக மேற்கு வங்க மாநிலத்திற்கு எட்டு கட்ட தேர்தலை அறிவித்தது என்று அரசியல்கட்சிகள் விமர்சித்தனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆனந்த் சர்மா கூறுகையில், உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வை அமைத்து தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க உரிய தகுதியையும், விதிமுறைகளையும் வகுத்து அறிவிக்க வேண்டும். தொடர் புகார்களுக்கு ஆளாகியுள்ள தற்போதைய ஆணையத்தை கலைத்து உத்தரவிட வேண்டும். தற்போதைய ஆணையர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றுவலியுறுத்தியுள்ளார்.