சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு உறுதியானதால் புதிய தேர்தல் அதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகார் மாநகராட்சிக்குக் கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், பா.ஜ.க. சார்பில் மனோஜ் சோன்கரும், ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர்.
இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்த நிலையில் பா.ஜ.க.வுக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகளும் கிடைத்தன. இருப்பினும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாகத் தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் தெரிவித்த நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் பாஜக வேட்பாளர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் வாக்குச்சீட்டில் மாற்றம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடரந்து, பா.ஜ.க வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்காலத் தடையும் கோரியது.
கடந்த 5-ஆம் தேதி ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் அதிகாரியை நேரில் அழைத்து வாக்குச்சீட்டில் குறியிடும்போது கேமராவை பார்த்து என்ன செய்தீர்கள் என்று தலைமை நீதிபதி தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். வாக்குச்சீட்டில் தவறு என்று குறியிடுவது, வீடியோவை பார்த்தாலே தெரிகிறது எனக் கண்டனம் தெரிவித்தது.
இந்த விசாரணையில் முறைகேடு செய்ததை ஒப்புக்கொண்டதால், அவரை கண்டித்தும், நாளை ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி எந்தக் கட்சியையும் சாராத புதிய தேர்தல் அதிகாரியை நியமிக்கவும், சண்டிகர் மேயர் தேர்தல் நடைமுறையில் தலையிட்ட பாஜகவைச் சேர்ந்த தேர்தல் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வாக்குச்சீட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சண்டிகார் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
ண்டிகாரில் புதியதாகத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை" என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.