india

img

ஏழை மக்களின் முதுகெலும்புதான் முறிக்கப்படுகிறது... நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை... பொதுமுடக்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த அம்பானி மகன்....

மும்பை:
மகாராஷ்டிராவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால், அங்கு பகுதிநேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இது ஹோட்டல் உரிமையாளர் கள், சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பொதுமுடக்கம் அறிவிக்கக் கூடாது என்று போராட்டங்களை நடத்திவருகின்றனர். 

இந்நிலையில், நாட்டின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றான அனில் அம்பானியின் குடும்பத்தி லிருந்தே, கொரோனா ஊரடங்கிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.‘ரிலையன்ஸ்’ குழுமத் தலைவரான அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா ஊரடங்கு நமது சமூகத்தின் ஆரோக்கியத்தையும், முதுகெலும்பை அழிக்கின்றதே தவிர, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதாக இல்லை” என்று கூறியுள்ளார்.

“நடிகர்கள் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடத்தலாம், கிரிக்கெட் வீரர்கள் இரவு நேரத்தில் விளையாடலாம், அரசியல்வாதிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம்.ஆனால் மக்களுடைய வாழ்வாதார தொழிலுக்கு மட்டும் கொரோனா பெயரில் தடை விதிப்பீர்களா.. சாதாரண மக்களின் வாழ்வாதாரத் தொழில்கள் அரசுக்கு அத்தியாவசியமாக இல்லையா..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஆட்சியாளர்கள் கருதும்அந்த ‘அத்தியாவசியம் இல்லாத’ தொழில்கள்தான், இந்த சமூகத்தினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும் பாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:“கொரோனா பொதுமுடக்கங் களுக்கு ஆரோக்கியத்துடன் எந்த தொடர்பும் இல்லை. தினசரி கூலித் தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத்தொழில் முனைவோர்கள், உண வகங்கள் மற்றும் தாபாக்கள், பேஷன்கள் மற்றும் துணிக்கடைகள் நடத்துவோர்- ஆகிய இவர்கள்தான் நமது சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். இந்த பொதுமுடக்கம் மூலம் அந்த முதுகெலும்பு உடைக்கப்படுகிறது. 

மேலும், ஜிம், விளையாட்டு வளாகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை மூடுவதன் மூலம்,ஊரடங்கு நமது ஆரோக்கியத்தைத் தான் குறைக்கின்றன. உடற்பயிற்சி, சூரிய ஒளி மற்றும் புதிய காற்று ஆகியவை நல்ல ஆரோக்கியம் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கான வலுவான தூண்கள் ஆகும். ஆனால், ஊரடங்கு என்ற பைத்தியக்காரத்தனத்தின் மூலம் நாம் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. ஊரடங்கு உடல்நலம் பற்றியது அல்ல. இது கட்டுப்பாட்டைப் பற்றியது. நம்மில் பெரும்பாலோர் அறிந்தும் அறியாமலும் மிகப்பெரிய மற்றும் மிகவும் மோசமான திட்டத்தின் வலையில் விழுவதாக நான் நினைக்கிறேன்.தவறு என்னவென்றால், ஊரடங்குஎன்பது, வெறுமனே திறனற்ற ஆளுகை என்று மக்கள் நினைக்கிறார்கள். அது இல்லை. இது ஒரு புதிய உலக ஒழுங்கைக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த, சிந்திக்கப்பட்ட கொள்கைகளின் தொகுப்பாகவே நான் பார்க்கிறேன்.ஊரடங்கு சமத்துவமின்மையை மோசமாக்குகிறது. விவசாய நிலங்கள் பெருநிறுவனமயம் ஆக்கப்பட்டு காலனித்துவமாக்கப்பட்டு உள்ளன. இந்த உலகளாவிய சதித்திட்டத்தை நாம் எதிர்ப்போம், மேலும் நம் நாட்டை இன்னும் காலனித்துவமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவோம். நாம் செய்ய வேண்டியது சத்தியத்தை எழுப்புவதும், அன்பு, அமைதி, ஒற்றுமை மற்றும் இரக்கத்திற்காக நிற்பதுவும் மட்டுமே என்று உரக்கச் சொல்வோம். இவ்வாறு அன்மோல் அம்பானி கூறியுள்ளார்.29 வயதான அன்மோல் அம்பானி, அனில் அம்பானியின் மூத்த மகன் மற்றும் ‘ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட்’ நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆவார்.

;