india

img

71 லட்ச பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சுமார் 71 லட்சம் இந்தியப் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்-பின் தனியுரிமை கொள்கைகளை மீறும் பயனர்கள் மீது மாதந்தோறும் மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை, விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் ஆகியவற்றை மீறியதற்காக, சுமார் 71 லட்சம் இந்தியப் பயனர்களின் கணக்கை, அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பும் பயனர்களை நவீன் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து, கணக்குகள் தடை செய்யப்படுகிறது. பயனர்கள் பாதுகாப்பு சூழலை பராமரிக்கும் வகையில், விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மெட்டா உறுதி அளித்துள்ளது.

;