india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

ஆதார் இணைப்பு வழக்கு 
புதுதில்லி:

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது தொடர் பாக வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்துக்கு  மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலை. முறைகேடு விசாரணைக்கு அனுமதி
தஞ்சாவூர்:

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2017 - 2018 ஆம் காலகட்டத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவுசெய்யப் பட்டது. இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த நீண்ட இழுபறிக்குப் பிறகு பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி கொடுத்துள்ளது.