india

இரண்டு மணிநேரமாக முடங்கிய இணையதளம் பதிலளிக்காத தேர்தல் ஆணையம்

18ஆவது மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிவுகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://results.eci.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. ஊடகங்கள் வாக்கு எண்ணிக்கை  மையங்களில் கிடைக்கும் தகவல்களை செய்திகளாக வெளியிட்டாலும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளே இறுதியானது என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையின் 4 மற்றும் 5 ஆவது (தோராய மாக) சுற்றுக்கு பின் 2 மணிநேரம் தேர்தல் ஆணைய இணையதள அப்டேட்களை வெளியிட வில்லை. அதாவது அடுத்தகட்ட சுற்று முடிவுகளை வெளியிடவில்லை. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் இரண்டு மணிநேரமாக புதுப்பிக்கப்படாததன் காரணம் என்ன? இந்த நிலைக்கான உத்தரவு தேர்தல் ஆணையத்திற்கு எங்கிருந்து வந்தது” என கேள்வி எழுப்பினார். எனினும் இரண்டு மணிநேரமாக தேர்தல் ஆணைய இணையதளம் ஏன் முடங்கியது என்பதற்கு புதன் மாலை வரை, தேர்தல் ஆணையர்கள் பதிலளிக்கவில்லை.

;