வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

உருமாறிய கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 165 ஆக உயர்வு

புதுதில்லி, ஜன.28-

இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ், சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பல்வேறு உலக நாடுகளுக்கும் இந்த  புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
இந்தியாவில் இதுவரை 145 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் மேலும் சிலருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 165 ஆக அதிகரித்துள்ளது.

;