india

img

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

தேர்தல் ஆணையத்திற்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

புதுதில்லி, மே 19- தேர்தல் ஆணை யத்தின் பாரபட்ச மற்ற தன்மை கேள் விக்குறியாகியுள் ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஒரு  கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

என்ன நடவடிக்கை

பாஜகவின் எண்ணற்ற தலைவர்கள் தேர்தல் நடத்தை விதியை மிகவும் மோச மான முறையில் மீறி செயல்பட்டுக் கொண்டி  ருப்பது குறித்து தொடர்ந்து முறையீடு களை, தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அளித்திருக்கிறோம். அவர்கள் அப்பட்ட மான பொய்களை அவிழ்த்துவிடுதல், இட்  டுக்கட்டுதல், அச்சத்தைத் தூண்டுதல் மற்  றும் முஸ்லீம்களுக்கு எதிராக வெளிப் படையாகவே மிரட்டல் விடுதல் போன்ற வற்றை சுட்டிக் காட்டியிருந்தோம். எனி னும் இவற்றின்மீது நடவடிக்கை எடுக் கவோ, எவரையும் தண்டித்திடவோ தேர்  தல் ஆணையம் முன்வரவில்லை என்  பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர்  மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்த  நோயை முளையிலேயே கிள்ளி எறிந்திட  தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். துர திர்ஷ்டவசமாக தலைமைத் தேர்தல் ஆணையம் இதனைச் செய்திடவில்லை.   பிரதமருக்கு எதிரான முறையீடு தொடர்பாக, தேர்தல் ஆணையம் இதற்கு முன்னிருந்த செயல்பாடுகளிலிருந்து நழுவி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பு வதற்குப் பதிலாக, பாஜகவின் தலைவ ருக்கு அனுப்பியிருக்கிறது. அதுவும்கூட நாங்கள் புகார் செய்ய பல நாட்கள் கழிந்த  பின்னர், பல அமைப்புகள் இது தொடர்பாக  பிரச்சனையை எழுப்பிய பின்னர் தான் அனுப்பியுள்ளது. பாஜகவிற்கு அனுப்பிய இந்த நோட்டீ சும் கூட, பிரதமர் மற்றும் பாஜகவின் இதர  தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறித் தொடர்ந்து செயல்படுவதைத் தடுத்  திடும் விதத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்திடவில்லை.

ராமர் கோவில் மீது புல்டோசர் ஏற்றுவதாக பேசுவதா?

இப்போது பாஜகவின் பல தலைவர் கள் முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிராக  வெறுப்பை உமிழ்ந்திடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   சமீபத்தில், மே 16 அன்று உத்தரப்பிர தேசத்தில் பாரபங்கி என்னுமிடத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் “சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் ஆட்  சிக்கு வந்தால், ராமர் கோவில் மீது  அவர்கள் புல்டோசரை ஏற்றி, மீண்டும்  ராமரை ஒரு கூடாரத்திற்குக் கொண்டு  வந்துவிடுவார்கள்” என்று கூறியிருக்கிறார். மே 17 அன்று உத்தரப்பிரதேச முதல மைச்சர் ஆதித்யநாத், “காங்கிரஸ் அர சியலில் ஓர் அங்கம் முஸ்லிம்களுக்குத் துதிபாடுதல் ஆகும். அவர்கள் முஸ்லிம் கள் மட்டுமே பயன் அடையும் விதத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை கொண்டு வர விரும்புகிறார்கள்,” என்று பேசி இருக்கிறார். மேலும் அவர், “காங்கிரசும், ராஷ்டி ரிய ஜனதா தளமும் தலித்துகள், பழங்குடி யினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்  பினரின் இட ஒதுக்கீடுகளைப் பறித்து, அவற்றை முஸ்லீம்களுக்கு பணி மாற்றிட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றும் கூறியிருக்கிறார்.

தொடரும் வெறிப் பேச்சுக்கள்

அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பாஜகவின் முக்கிய  பிரச்சாரகர்களும், மே 18 அன்று சிவான்  (Siwan) என்னும் பகுதியில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது, “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொது  சிவில் சட்டத்தைக் கொண்டுவந்து, ஒரு வர் நான்கு தடவை திருமணம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்” என்று பேசியிருக்கிறார்கள். மேலும் அவர்கள், மதராசாக்கள் என்ற வார்த்தையைப் பயன்  படுத்தாமல் ஆனால் கேட்பவர்கள் அத னைப் புரிந்துகொள்ளும் விதத்தில், “நாங்  கள் முல்லாக்களை உற்பத்தி செய்திடும் கடைகளை மூடிவிடுவோம்” என்றும் பேசி யிருக்கிறார்கள். இதற்கு முன்பு தேர்தல் ஆணை யத்திற்கு நாங்கள் அளித்திட்ட முறையீடு கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தும் அதே சமயத்தில், மேலே குறிப்பிட்ட பேச்சுகளுக்கு எதிராக  பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்ய நாத் மற்றும் ஹிமந்தா பிஸ்வா ஆகியோர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று  தேர்தல் ஆணையத்தை  வலியுறுத்துகிறோம். நடவடிக்கை எடுத்திட தேர்தல் ஆணையம் தவறும்பட்சத்தில், தலை மைத் தேர்தல் ஆணையத்தின் பாரபட்ச மற்ற தன்மையே கேள்விக்குறியாகிவிடும் என்றும், அதன் நம்பகத்தன்மை சமரசத் திற்கு உள்ளாகி இருப்பதாகவுமே கருத  வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கவும் விரும்புகிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்  ளார்.                         (ந.நி.)

 

 

 

;