ஐந்தாம் கட்டத் தேர் தலை நோக்கி நாடு சென்று கொண்டி ருக்கும் நிலையில், ஆளும் கட்சிக்கு ஆதரவாக கள்ளத் தனமாக தூங்கி வழியும் தேர் தல் ஆணையம், இதுவரை தேர்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகளுக்கு 16 நோட்டீஸ்களை அளித்துள் ளது; அவற்றில் மூன்று மட் டுமே பாஜகவுக்கு அளிக்கப் பட்டுள்ளது. எஞ்சிய 13 நோட் டீஸ்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப் பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணை யத்தின் இணையதளம் மூல மாக தெரியவந்துள்ள இந்த விபரம், ஆணையத்தின் பார பட்சத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக 6 நோட்டீஸ்கள், பாரத் ராஷ்டி ரிய சமிதிக்கு எதிராக 3 நோட் டீஸ்கள், ஆம் ஆத்மிக்கு எதி ராக 2 நோட்டீஸ்கள், கர்நாடக அரசுக்கு எதிராக 1 நோட்டீஸ், தெலுங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எதி ராக 1 நோட்டீஸ், தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட் டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள அனைவரையும் விட பிரத மர் மோடி துவங்கி, மிக மோச மான முறையில் நடப்பு தேர் தல் களத்தில் மதவெறி பிரச்சா ரத்திலும், பிற மதத்தவர், பிற கட்சியினர் மீது வெறுப்பை யும், விஷத்தையும் பாஜக தலைவர்களே உமிழ்ந்தார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவர்களின் எவர் மீதும் தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்கவில்லை என் பது கவனிக்கத்தக்கது.