india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்த லில் சிக்கிம் புரட்சி முன்னணி (எஸ்கேஎம்)  மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக பிரேம் சிங் தமாங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் மீண்டும் பதவியேற்க உள்ளார்.

கடும் வெப்பம் காரணமாக தில்லியில் அனை த்து அங்கன்வாடி மையங்களையும் ஜூன் 30 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத் தாள் கசிவு என புகார் எழுந்த நிலையில், நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி உச்சநீதிமன் றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதனன்று மக்களவைத் தேர்தல் வாக்கு எண் ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தில்லி யில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் அக்கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் திங்களன்று ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வரும் நிலையில், சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் பிற்பகல் நேரங்களில் ஆர்டர் செய்வதை தவிர்க்குமாறு தங்களது வாடிக்கை யாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள 150 மாவட்ட ஆட்சியர் களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புகொண்டு பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி னார். இந்த விவகாரம் தொடர்பாக  ஜெய்ராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உடனடியாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அமித் ஷா மீதான குற்றச்சாட்டு களை விளக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்ற ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் திங்களன்று நிராகரித்தது. 

“மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2 மாதங்க ளுக்கு முன்பு வீட்டிலேயே தயாரிக்கப் பட்டவை என்பதால், அவை கள நிலவரத்துடன் ஒத்துப்போகவில்லை” என மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

சிவசேனா (உத்தவ்) தலைவரும், மகா ராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்க ளில் மோடி அரசில் இணைவார் என அமராவதி எம்எல்ஏ ரவி ராணா கூறியுள்ளதற்கு சிவசேனா (உத்தவ்) கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தண்ணீர் பஞ்சத்தில்  திண்டாடும் தில்லி
அவசர கூட்டத்தை கூட்ட யமுனை நதி வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தொடக்கத்தில், “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த மோடி அரசு, தற்போது ஆம் ஆத்மிக்கு வாக்களித்த தில்லி மக்கள் மீதும் தாக்கு தலை தொடங்கி யுள்ளது. அதாவது பாஜக ஆளும் ஹரியானா அரசுக்கு மறை முகமாக உத்தரவிட்டு, யமுனை நதியிலி ருந்து தில்லிக்கு வரும் குடிநீரை முற்றிலு மாக நிறுத்தியுள்ளது மோடி அரசு. இத னால் தில்லியில் தண்ணீர்ப் பஞ்சம் தீவிர மாகியுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் தண்ணீர் லாரியின் கூடாரம் போல் ஆகி யுள்ளது. தில்லியில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் லாரிகள் வட்டமடித்து வரு கின்றன.

இந்நிலையில், தில்லியில் குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்கவும், ஹரியானா மாநிலத்தில் இருந்து கூடுதல் நீரை பெற்றுத்தரக்கோரியும் ஆம் ஆத்மி அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய் தது. இந்த மனு திங்களன்று விசாரணை க்கு வந்த நிலையில்,  தில்லி குடிநீர்ப் பிரச்ச னையைத் தீர்ப்பதற்காக ஜூன் 5 அன்று அவசரக் கூட்டத்தை கூட்ட யமுனை நதி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தி டம் இருந்து கூடுதல் நீர் கேட்ட தில்லி அரசின் மனு மீதான விசாரணை ஜூன் 6இல் நடைபெற உள்ள நிலையில்,  ஜூன் 5 அன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூன் 6இல் அறிக்கை அளிக்கவும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் விரைவு  ரயிலில் தீ விபத்து

தில்லி சரிதா விஹார் காவல் நிலை யம் அருகே திங்களன்று மாலை 4 மணியளவில் ஷான்-இ- பஞ்சாப் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 4 பெட்டிகளில் பரவிய தீயை அணைக்கும் பணி யில் 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டநிலையில், இரவு 7 மணி வரை விபத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதம், காயம் குறித்த தகவல்கள் ஏதுவும் வெளியாகவில்லை. தீ அணைக் கப்பட்ட பிறகே தீ விபத்திற்கான கார ணங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;