india

img

‘பிரதமரின் பேச்சில் உண்மை இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்’

‘தி இந்து’ நாளிதழுக்கு  சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

பிரதமரின் தேர்தல் பேச்சுகளில் உண்மை இல்லை என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்  கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்  யெச்சூரி ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தியாளர் சந்தீப் புகான் முன்வைத்த கேள்விகளும், சீத்தாராம் யெச்சூரியின் பதில்களும் வருமாறு:

கேள்வி: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகளில் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை நடந்துள்ள தேர்தல் வாக்குப் பதிவுகள் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் மிகவும் உற்சாகத்துடன் இருப்பதைக் காண முடிகிறது. இதுபோன்று அவர்கள் கூறுவதற்கு அடிப்படை என்ன?

சீத்தாராம் யெச்சூரி: இதற்குக் காரணம், சென்ற இரு தேர்தல்களிலும் இருந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பாஜக-வின் பக்கம் பெரிய அளவிற்கு எழுச்சி இல்லை. இது முதல் குறியீடு. இரண்டாவதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது பாஜக-வினரோ மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எதைப்பற்றியும் பேசாது, அவர்களைத்  திசைத் திருப்பும் விதத்தில் எதைக் கூறியபோதிலும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. ‘உங்களுடைய (இந்துக்களுடைய) சொத்துக்களைப் பறித்து,  முஸ்லிம்களிடம் கொடுத்துவிடுவார்கள்.. உங்கள் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம் களிடம் கொடுத்து விடுவார்கள்.. உங்கள் தாலியையும் பறித்துக்கொள்வார்கள்’என்று கூறியது எல்லாம் மக்களுக்கு வினோதமாகவும் வேடிக்கையாகவும் அமைந்துள்ளது. விலைவாசி உயர்வு குறித்தும், வாழ்வாதாரப் பிரச்சனை குறித்தும், நாள்தோறும் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும்  பாஜகவினர் ஏதாவது பேசுவார்களா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இன்றைய தினம் நாட்டிலுள்ள மக்களில் 90 விழுக்காட்டினர் தாங்கள் உயிர்  வாழ்வதற்காக கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? 

குடும்ப சேமிப்பு என்பது இதுவரையில்லாத அளவிற்கு குறைந்திருக்கிறது.  ஒவ்வொரு குடும்பத்தினரும் வாங்கியுள்ள கடன்கள்  என்பதும் இதற்குமுன் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதுவே இன்றுள்ள யதார்த்தமான பிரச்சனைகளாகும். இவை குறித்து எதையும் பிரதமரோ, பாஜக-வினரோ பேசுவதில்லை. இவ்வாறு மக்களின் பிரச்சனைகள் எதையும் இவர்கள் பேசாமல் இருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு  உதவிக் கொண்டிருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த  கட்சிகள் மக்கள் பிரச்சனைகளைத் தங்கள்  பிரச்சாரத் தின்போது எடுத்துரைப்பதால் அவை மக்களுடன் மிகவும் ஆழமான முறையில் நெருக்கமாகி இருக்கின்றன.

கேள்வி: எதிர்க்கட்சிகளின் கூற்றின்படி இப்போது நிலைமைகள் மாறியிருக்கும் மாநிலங்கள் எவை?

சீத்தாராம் யெச்சூரி: பாஜக-வின் எண்ணிக்கை பல மாநிலங்களில் வீழ்ச்சி அடையும். கர்நாடக மாநிலத்தில் தாங்கள் வெற்றி பெறுவதற்காக தங்களா லான அனைத்தையும் பாஜகவினர் செய்து பார்த்தார்கள். எனினும் அவர்கள் அங்கே வெற்றி பெற முடியாது. அவர்களின் எண்ணிக்கை குறையும். அதேபோன்று மகாராஷ்டிராவிலும் அவர்கள் இழப்பைச் சந்திப்பார்கள். குஜராத்தில் கூட அவர்கள் முன்பு இருந்ததைப்போல வெற்றி பெறமுடியாது, இழப்பைச்  சந்திப்பார்கள். ராஜஸ்தானில் உறுதியாக அவர்கள்  இழப்பு ஏற்படும். ஹரியானாவில், காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும்  ஒன்றிணைந் திருப்பதால், எதிர்க்கட்சிகள் (இந்தியா கூட்டணியே) ஆதாயம் அடைந்திடும். உத்தரப்பிரதேசத்திலும் கூட, பாஜகவிற்கு  இழப்புஏற்படும். பீகாரில் நிச்சயமாக அவர்கள் முன்பு பெற்ற இடங்களை இப்போது பெற முடியாது. வட கிழக்கு மாநிலங்களிலும் கூட, முன்பு இருந்த எண்ணிக்கை இப்போது குறையும். மேற்கு வங்கத்தில் இந்தத் தடவை பாஜகவினால் ஆதாயம் அடைய முடியாது.
 

 

;