india

img

‘மதர் டெய்ரி’ பால் விலை உயர்வு!

ஒன்றிய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மதர் டெய்ரி’ நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முடிந்த நிலையில் ஒன்றிய அரசு சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5% உயர்த்தியும்,  தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மதர் டெய்ரி’ நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இன்று முதல், ரூ.56 ஆக இருந்த பசு மாட்டுப் பால் (Cow Milk) விலை ரூ.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.66 ஆக இருந்த கொழுப்பு நிறைந்த பால் விலை, ரூ.68க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.54 ஆக இருந்த சமப்படுத்தப்பட்ட பால் விலை, ரூ.56க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு சுங்கக் கட்டணம் உயர்வு மற்றும் பால் விலை உயர்வை அமல்படுத்திய ஒன்றிய அரசுக்கு சிபிஎம் உட்பட அரசியல் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன.
 

;