india

img

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும் கேரளம்

மக்களுக்குச் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்திருப்பதில், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக கேரளம் திகழ்கிறது என்று கேரள முன்னாள் நிதி அமைச்சரும், புகழ்பெற்ற பொருளாதார வல்லுநருமான டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் கூறினார். பஞ்சாப் மாநிலத்திலிருந்து வெளிவரும் ‘டெய்லி தேஷ் சேவக்’ என்னும் பஞ்சாபி நாளிதழின் 29ஆவது அமைப்பு தினக் கொண்டாட்டம் சண்டிகரில் ஜனவரி 1 அன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று சிறப்புரையாற்றும் போதே தாமஸ் ஐசக் இவ்வாறு கூறினார். அவரது உரையின் சாராம்சம்:

இந்தியாவிலேயே மற்ற அனைத்து மாநி லங்களையும் விட கல்வியறிவு, குழந்தை கள் இறப்பு விகிதம், கருவுற்ற தாய்மார்கள் இறப்பு விகிதம், மக்களின் சராசரி ஆயுள்,  ஆண்-பெண் விகிதம், தனிநபர் வருமானம் என அனைத்து குறியீடுகளிலும் இந்தியா வின் சராசரியைவிட கேரளம் மிகச்சிறந்த முறையில் முதன்மை பெற்று இருக்கிறது.

இது தொடர்பாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல புள்ளிவிவரங்கள் அட்ட வணையில் குறிப்பிட்டிருப்பதாவது:

அனைத்து விதங்களிலும் சிறந்து விளங்கு வதற்கு என்ன காரணம்?  

முக்கியமான காரணம் நிலச் சீர்திருத்த மாகும். கேரளாவில் விவசாய வளர்ச்சியில் நிலச் சீர்திருத்தங்கள் பிரதானப் பங்க ளிப்பைச் செய்துள்ளது.  

முன்னதாக  மாநிலத்திலுள்ள 5 விழுக்காடு மக்களிடம் 70 விழுக்காடு நிலம் இருந்தது. அதேபோன்று கல்வி வளர்ச்சியும் பரவ லும் மக்களின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கிறது. கேரளா வில் இருக்கின்ற ஒரு தச்சரோ அல்லது ஒரு  கம்மியரோ (plumber)கூட ஆங்கிலத்தி லும்கூட நன்கு எழுதப்படிக்கத் தெரிந்தவர் வளாவார்கள்.

 இதன் காரணமாக அவர்கள் வெளிநாடு களுக்கு பணம் ஈட்டுவதற்காக மிக எளிதாகச் செல்ல முடிகிறது. அயல் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ள 20 லட்சம் மக்களில் 30 விழுக்காட்டினர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். (ந.நி.)

நிலச்சீர்திருத்தமே காரணம்
இந்தியாவின் சராசரியைவிட கேரளம் 

டெய்லி தேஷ் சேவக் மேலாண் இயக்குநர், சுக்விந்தர் சிங் சேகான் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அவர் தன் தலைமையுரையில் டெய்லி தேஷ்  சேவக் 1920களிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதாகவும், பல தடவைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாக மூடப்பட்டது என்றும், தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் அவர்களால்தான் அது 1996 ஜனவரி 1இலிருந்து மீண்டும் தொடங்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

கல்வியறிவு
கேரளாவின் சராசரி - 96.2%    இந்தியாவின் சராசரி -  77.7%

குழந்தை இறப்பு(Infant Mortality)

கேரளாவின் சராசரி - 7 (1000க்கு)
இந்தியாவின் சராசரி - 32 (1000க்கு)

கர்ப்பிணிப் பெண்கள் இறப்பு(Maternal Mortality)

கேரளாவின் சராசரி  - 43 (ஆயிரத்திற்கு) 
இந்தியாவின் சராசரி - 113 (ஆயிரத்திற்கு)

சராசரி ஆயுள்

கேரளா 76.4 ஆண்டுகள்; இந்தியாவின் சராசரி 70.9 ஆண்டுகள்

ஆண்-பெண் விகிதாச்சாரம்

கேரளம் - 1082(1000க்கு);   இந்தியா சராசரி-945(1000க்கு)

தனிநபர் வருமானம்

கேரளம் - ரூ.2,16,749(ஆண்டுக்கு);  
இந்தியா - ரூ.1,45,680(ஆண்டுக்கு)