ஐஐடி கான்பூரில் ஆய்வு மாணவர் பிரசாந்த் சிங், மாணவர் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஐஐடி வளாகங்களில், மாணவர்களின் மரணம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று ஐஐடி கான்பூரில், ஆய்வு மாணவரான பிரசாந்த் சிங், தனது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீண்ட நேரமாக மாணவரின் விடுதி அறை உள்பக்கமாக பூட்டி இருப்பதாகவும், கதவைத் தட்டினாலும் திறக்கவில்லை என சக மாணவர்கள் புகார் அளித்தனர். இதை அடுத்து, நிர்வாகத்தினர் அறைக் கதவுகளை உடைத்துப் பார்த்தபோது, மாணவர் போர்வையைப் பயன்படுத்தி தூக்கிட்ட நிலையிலிருந்துள்ளார்.
இதை அடுத்து போலீசாருக்கு, தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் மாணவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மாணவர் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.