india

img

‘நியூஸ் கிளிக்’ ஆசிரியரை கைது செய்தது சட்டவிரோதம்!

புதுதில்லி, மே 15 - ‘நியூஸ் கிளிக்’ இணைய ஊட கத்தின் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவை, மோடி அரசு ‘உபா’  (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்தது  சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், அவரை  உடனடியாக விடுதலை செய்ய  வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊழல் - மோசடிகளை அம்பலப்படுத்திய நியூஸ் கிளிக்
மோடி அரசின் ஊழல் மோசடிகள், இந்துத்துவா வெறுப்பு அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்தும் முதன்மையான ஊடகங்களில் ஒன்றாக ‘நியூஸ் கிளிக்’ இணையதள செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. 

தலைநகர் தில்லியில் சுமார் ஓராண்டுக்கு மேல் நடைபெற்ற விவ சாயிகள் போராட்டம், சிஏஏ எதிர்ப்பு  போராட்டத்தின் போது சங்-பரி வாரங்கள் தில்லியில் கட்டவிழ்த்து விட்ட வன்முறை, கொரோனா தொற்று நோய் பாதிப்பு காலத்தில், மோடி அரசின் மோசமான செயல்பாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ‘நியூஸ் கிளிக்’ மிகத் துணிச்சலாக பதிவு செய்தது. இதனால், இந்தப் போராட்டங் களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டனர்.

பழிவாங்கிய பாஜக அரசு
இதனால், ‘நியூஸ் கிளிக்’ ஊட கத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என துடித்துக் கொண்டி ருந்த நரேந்திர மோடி அரசு, இந்தி யாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறியதாகக் குற்றம்சாட்டி, 2021 செப்டம்பரில் அமலாக்கத்துறை யை ஏவி ரெய்டு நடத்தியது.

‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்துக்குச் சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று  அமெரிக்க ஊடகமான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பொய்ச் செய்தி ஒன்றை வெளி யிட்டிருந்தது. அதாவது, சீனாவில் தொழில் நடத்தும் அமெரிக்காவைச் சேர்ந்த நெவில் ராய் சிங்கத்துக்கும் ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்திற்கும் தொடர் பிருப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பரப்பி யதன் அடிப்படையிலேயே ரெய்டு நடத்தியதாக கூறிய ஒன்றிய அரசு, ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்தின் முதன் மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா வுக்குச் சொந்தமான ரூ. 4.5 கோடி மதிப்பிலான வீட்டையும் ரூ. 41 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை மூலம் முடக்கியது. 

ஏவி விடப்பட்ட அமலாக்கத்துறை
2018 முதல் 2021 வரையிலான 3 ஆண்டுகளில், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங் களிடமிருந்து ‘நியூஸ் கிளிக்’ நிறு வனத்துக்கு ரூ. 86 கோடி நிதியுதவி வந்திருப்பதாகவும் தெரிவித்தது.

இதற்கு அப்போதே ‘நியூஸ் கிளிக்’கின் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மறுப்பு தெரிவித்தார். மேலும், “ஒன்றிய பாஜக அரசின் ரெய்டு நடவடிக்கை மற்றும் எங்கள் நிறு வனம் மீதான அது குறிப்பிடும் குற்றச் சாட்டுகள், ‘நியூஸ் கிளிக் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் பத்திரிகைச் சுதந்திரத்தை முடக்கும் முயற்சியே தவிர வேறில்லை; இந்திய அரசி யலமைப்பு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் நடவடிக்கை, இது!” எனக் குறிப்பிட்டார்.

எனினும், ‘நியூஸ் கிளிக்’ இணையதள நிறுவனத்தை, தில்லி காவல்துறை மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED), பொருளாதார குற்றப்பிரிவு (EOW) ஆகியவற்றின் கண்காணிப்பின் கீழ் மோடி அரசு 

;