india

img

63 தொகுதிகளை இழந்த பாஜக! படுதோல்வி அடைந்த 19 ஒன்றிய அமைச்சர்கள்

கடந்த மக்களவை தேர்தலில் 303 தொகுதி களை வென்ற பாஜக, 18ஆவது மக்க ளவைத் தேர்தலில் வெறும் 240 தொகுதி களை மட்டுமே கைப்பற்றி தனி பெரும்பான்மை யை இழந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் தய வுடன் மீண்டும் ஆட்சி அரியணையில் அமர  உள்ளது. பிரதமர் மோடி 3-ஆவது முறையாக பிர தமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், 18ஆவது மக்களவை தேர்தலில் 63 தொகுதி களை இழந்தது மட்டுமின்றி, 19 ஒன்றிய அமைச்  சர்களையும் இழந்ததால் தனது அரசியல் அடித்  தளம் ஆட்டம் கண்டுள்ளது.

1. ஸ்மிருதி இரானி 
(அமேதி - உத்தரப்பிரதேசம்)

பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நெருக்கமா னவர். பாஜகவின் மகளிர் பிரிவு தலைவராக கரு தப்படும் ஸ்மிருதி இரானி, கடந்த 2019 மக்க ளவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்  ராகுல் காந்தியை வீழ்த்தி தேசிய அளவிலான கவ னத்தை ஈர்த்து ஒன்றிய அமைச்சரவையில் பெண்  கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலிலும் அதே அமேதி தொகு தியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, காங்கிரஸ்  கட்சியின் சாதாரண தொண்டரான கிஷோரி லால்  சர்மாவிடம் 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று நாடாளுமன்றம் செல்ல முடியாத  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

2. எல். முருகன் (நீலகிரி - தமிழ்நாடு)

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாநில தலைவரும், ஒன்றிய இணை அமைச்ச ரான (மீன்வளத்துறை) எல்.முருகன் 18ஆவது  மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா விடம் 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்  வியைத் தழுவினார்.

3. ராஜீவ் சந்திரசேகர்  (திருவனந்தபுரம் - கேரளா)

பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவரான ராஜீவ் சந்திரசேகர் ஒன்றிய அமைச்சரவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சராக உள்ள நிலையில், மக்க ளவைத் தேர்தலில் கேரளாவின் திருவனந்தபுரம்  தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்  களில் ஒருவரான சசி தரூரிடம் 16,077 வாக்குகள்  வித்தியாசத்தில் வீழ்ந்து அமைச்சராகும் தகுதி யை இழந்தார்.

4.அர்ஜுன் முண்டா (குந்தி - ஜார்க்கண்ட்)

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்  வரும், ஒன்றிய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சருமான அர்ஜுன் முண்டா மக்களவை தேர்தலில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி தொகுதியில் களமிறங்கினார். காங்கிரஸ் வேட்  பாளர் காளி சரணிடம் 1,49,675 வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வியை தழுவி மீண்டும் அமைச்ச ராக பொறுப்பேற்க முடியாதபடி ஓரங்கட்டப்பட்டார். 

5. ஆர்.கே.சிங் (ஆரா - பீகார்)

மோடி அமைச்சரவையில் புதிய மற்றும் புதுப்  பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சராகப் பதவி வகிக்கும் ராஜ்குமார் சிங் மக்களவை தேர்தலில் பீகாரின் ஆரா தொகுதியில் களமி றங்கினார். வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்  திய கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சியின் வேட்பாளர்  சுதாமா பிரசாத்திடம் 59,808 வாக்குகள் வித்தியா சத்தில் வீழ்ந்த ராஜ்குமார், மீண்டும் அமைச்சர்  ஆக முடியாதபடி வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

6. அஜய் குமார் மிஸ்ரா  (லக்கிம்பூர் கெரி - உத்தரப்பிரதேசம்)

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் கடந்த 2021இல் நடைபெற்ற விவாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் போராட்டக்களத்திற்குள் காரை புகுத்தி, விவ சாயிகளை கொன்ற விவகாரத்தில் ஒன்றிய உள்  துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், லக்கிம்பூர் கெரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அஜய் குமார் மிஸ்ரா, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உத்கர்ஸ் வர்மா விடம் 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

7. கைலாஷ் செளத்ரி  (பார்மர் - ராஜஸ்தான்)

ஒன்றிய அமைச்சரவையில் விவசாயம் மற்  றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சரா கப் பதவி வகித்து வந்த கைலாஷ் செளத்ரி, மக்க ளவைத் தேர்தலில் ராஜஸ்தானின் பார்மர் தொகு தியில் களம் கண்டார். இவரை எதிர்த்துப் போட்டி யிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உம்மேதா ராம்  பெனிவால் மற்றும் சுயேச்சை வேட்பாளர் என  இருவரும் அமைச்சர் கைலாஷை மூன்றாம்  இடத்திற்குத் தள்ளிவிட்டனர். வெற்றியாளரான காங்கிரஸ் கட்சியின் உம்மேதா ராம் பெனிவால்  7,04,676 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாள ரான 5,86,500 வாக்குகளையும், மூன்றாவது இடத்  தைப் பிடித்துள்ள கைலாஷ் செளத்ரி 2,86,733 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

8. மகேந்திர நாத் பாண்டே (சந்தெளலி - உத்தரப்பிரதேசம்)

உத்தரப்பிரதேசத்தின் சந்தெளலி தொகுதி யில் களம் கண்ட ஒன்றிய கனரக தொழில்துறை  அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தன்னை எதிர்த்துக் களம் கண்ட சமாஜ்வாதி கட்சி வேட்பா ளர் பிரேந்திர சிங்கிடம்  21,565 வாக்குகள் வித்தி யாசத்தில் வீழ்ந்தார்.

9. சாத்வி நிரஞ்சன் ஜோதி  (பதேபூர் - உத்தரப்பிரதேசம்)

உத்தரப்பிரதேசத்தின் பதேபூர் தொகுதி யில் போட்டியிட்ட மதவெறி பேச்சுகளுக்கு பெயர் போன ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள்,  உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பா ளர் நரேஷ் சந்திர உத்தம் பட்டேலிடம் 33,199 வாக்கு  கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

10. சஞ்சீவ் பால்யன்  (முசாபர்நகர் - உத்தரப்பிரதேசம்)

ஒன்றிய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்  ஒன்றிய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்  வளத்துறை அமைச்சரான சஞ்சீவ் பால்யன் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அதே முசாபர்நகர் தொகுதியிலேயே மீண்டும் களமிறங்கினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் ஹரேந்திர  சிங் மாலிக்கிடம் 24,672 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், சஞ்சீவ் பால்யனின் அமைச்சர் கனவு தவிடு பொடியானது.

11. வி.முரளிதரன் (அட்டிங்கல் - கேரளா)

கேரளாவின் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய வெளியுறவுத் துறை  இணையமைச்சரும், நாடாளுமன்ற விவகா ரங்களுக்கான இணையமைச்சருமான வி. முரளி தரன் மூன்றாமிடம் பெற்று தோல்வியைத் தழுவி யுள்ளார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அடூர் பிரகாஷ் 3,28,051 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி.ஜாய் 3,27,367 வாக்குகளை  பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். வி. முரளி தரன் 3,11,779 வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

12. சுபாஷ் சர்க்கார்  (பாங்குரா - மேற்குவங்கம்)

மேற்கு வங்கத்தின் பாங்குரா தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய கல்வித்துறை இணை  அமைச்சரான சுபாஷ் சர்க்காரும் தோல்விய டைந்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட  திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அரூப் சக்ர வர்த்தியைவிட 32,778 வாக்குகள் வித்தியா சத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

13. நிஷித் பிராமனிக்  (கூச்பிகார் - மேற்குவங்கம்)

ஒன்றிய உள்துறை இணையமைச்சரான  நிஷித் பிராமனியும் மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். மேற்குவங்  கத்தின் கூச்பிகார் தொகுதியில் போட்டியிட்ட  இவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஜெக தீஷ் சந்திர பர்மா பசுனியாவிடம் வீழ்ந்தார். நிஷித்  பிராமனிக் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்க மானவர். மதவன்முறை மற்றும் வகுப்புவாத பிரச்சாரங்களை தூண்டும் பல்வேறு சர்ச்சைக் குரிய சம்பவங்களில் சிக்கியவர் என்பது குறிப்பி டத்தக்கது.

இதேபோல ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்  தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்  தேப் ஸ்ரீ (தெற்கு கொல்கத்தா - மேற்குவங்கம்),  சிறுகுறு தொழில்துறை இணை அமைச்சர் பானு  பிரதாப் சிங் (ஜலான் - உத்தரப்பிரதேசம்), ரசாய னங்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்  சர் பகவந்த் குபா (பிதார் - கர்நாடகா), வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான ஒன்றிய  அமைச்சர் கௌஷல் கிஷோர் (மோகன்லால் கஞ்ச் - உத்தரப்பிரதேசம்), ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ராவ் சாகேப் தன்வே (ஜல்னா  - மகாராஷ்டிரா), பழங்குடியினர் விவகாரங்க ளுக்கான இணை அமைச்சர் பாரதி பவார்  (திண்டோரி - மகாராஷ்டிரா) என 18ஆவது மக்க ளவைத் தேர்தலில் 19 ஒன்றிய அமைச்சர்கள்  படுதோல்வி அடைந்துள்ளனர். 

;