india

சிக்கிமில் பாஜக ‘0’ மீண்டும் ஆட்சி அமைக்கிறது எஸ்கேஎம்

கங்டோக், ஜூன் 02- வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் மாநிலங் களில் 18ஆவது மக்களவை தேர்தலு டன், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெற்றது. அதன்படி 32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்திற்கும், 60 தொகுதிகளை கொண்ட அருணாச்சலப்பிரதேசம் மாநி லத்திற்கும் ஏப்ரல் 19 அன்று முதல் கட்டத்தில், ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், சட்ட மன்றத்திற்கான ஆட்சி காலம் முன்கூட்டியே முடிவடைவதால் இரு மாநிலங்களுக்கும் ஜுன் 2 அன்று வாக்கு  எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அறிவிப்பின்படியே ஞாயிறன்று இரு மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

சிக்கிம்
32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் புரட்சிகர (கிராந்திகாரி) முன்னணி கட்சி  (எஸ்கேஎம்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎம்), பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன.  ஞாயிறன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதல் சுற்று முதலே ஆளும் கட்சியான  எஸ்கேஎம் 31 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில், எதிர்க்கட்சியான எஸ்டிஎம் ஒரே ஒரு தொகுதியில் முன்னிலையில் இருந்தது. ஆட்சியை கைப்பற்றுவோம் என பல்வேறு இலவச வாக்குறுதிகளை அளித்து களமிறங்கிய பாஜக முன்னிலை நிலவரத்தில் பெயர் இல்லாமால் இருந்தது. பெரும்பான்மைக்கு 19 இடங்களே தேவை என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் சிக்கிம் புரட்சிகர (கிராந்திகாரி) முன்னணி கட்சி 31 தொகுதி களை கைப்பற்றி அமோக வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 25 ஆண்டுகள் (5 முறை) சிக்கிமை ஆட்சி செய்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி ஒரே ஒரு தொகுதி யிலும், ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருந்த பாஜக ஒரு  தொகுதிகளில் கூட வெற்றி பெறாமலும் மண்ணைக் கவ்வின.  பெயரவிற்கு களமிறங்கிய காங்கிரஸ் ஒரு தொகுதி கூட கைப்பற்றவில்லை என்ற நிலையில், சிக்கிம் முதல்வராக எஸ்டிஎம் கட்சியின் தலைவர் பிரேம் சிங் தாமங் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். 

அடக்குமுறை மூலம் அருணாச்சலில் பாஜக ஆட்சி

60 தொகுதிகளை கொண்ட அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஞாயிறன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள்  தேவை என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் பாஜக 46 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை உடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி 5 இடங்களில் வெற்றி  பெற்றுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் (அஜித்) 3 இடங்களிலும், அருணாச்சல் மக்கள் கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களை மிரட்டி வேட்புமனு தாக்கலை வாபஸ்  பெற வைத்தது உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறை சம்பவங்கள் மூலம் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அருணாச்சலப்பிரதேச மாநில முதல்வராக மீண்டும் பேமா கண்டு பொறுப்பேற்க வுள்ள நிலையில், இவர் காங்கிரஸ் வேட்பாளர்களை கடத்தி, அவர்களின் வேட்புமனுவை வாபஸ் பெற வைத்து போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;