india

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் யஷ்பால் நினைவு நாள்....

தோழர் யஷ்பால் 1903 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதிபிரிட்டிஷ் இந்தியாவின் காங்க்ரா மலையில் பிறந்தார். புரட்சிகர படைப்பாளியான இவர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரைச் சந்தித்து இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். 1929 டிசம்பர் 23 அன்று வைஸ்ராய்இர்வின் பிரபுவின் மீது குண்டுகளைப் பொழிந்தார். ஆனால் இர்வின் தப்பித்தார். 1930ல் சந்திரசேகர ஆசாதால் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் மறு கட்டமைப்பு செய்யப்பட்டது. அப்போது யஷ்பால் மத்தியக்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 வயதான பிரகஸ்வதி என்ற இளந்தோழரின் தொடர்பு யஷ்பாலுக்குக் காதலாய் மலர்ந்தது. 1931 பிப்ரவரியில் சந்திரசேகர ஆசாத் கொல்லப்படும் வரை அவருடன் இணைந்து செயல்பட்டார். 1932 ஜனவரியில் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கத்தை ஒருங்கிணைத்து அதற்குத் தலைமை வகித்தார் யஷ்பால். அந்த மாதத்திலேயே ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார். 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் 1938 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். 

பின்னர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளரானார். 1936 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ல் அவரை விரும்பிய பிரகஸ்வதியை பெல்லாரி சிறையில் மணந்தார். ஏராளமான நூல்களை இந்தியிலும் உருதிலும் எழுதினார்.  இவரது ‘காம்ரேட்’ எனும் நூல்மிகவும் புகழ் பெற்ற நூலாகும். 1976 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி யஷ்பால் மறைந்தார்.

====பெரணமல்லூர் சேகரன்====
 

;