தமிழ்நாட்டில் 2 ஆயிரம் பகுதிகளில் மினிகிளினிக் திட்டம் திங்களன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக் செயல்பட உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.
**********************
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக இன்று முதல் ஆர்டிஓ விசாரணை துவங்குகிறது.சித்ரா மற்றும் ஹேம்நாத் குடும்பத்தினரிடம் இருந்து விசார ணையை துவக்கவுள்ளனர்.
**********************
குற்றால அருவிகளில் குளிப்ப தற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
**********************
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல்பெண்கள் மற்றும் சிறார்கள் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள் ளது.
**********************
டி.ஆர்.பி.ரேட்டிங் மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி தலைமை செயல் அதிகாரி விகாஸ்கஞ்சன்தானியை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
**********************
புவி வெப்பமடைவதைத் தடுக்கா விட்டால் இந்த நூற்றாண்டில் பேரழிவு வெப்பநிலையை நோக்கி உலகம் செல்லும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
**********************
கொரோனா பரவல் தடுப்புஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல உதவிகளை செய்த நடிகர் சோனு சூட்டை கவுரவப்படுத்தும் வகையில், ரயில் நிலையங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களை அவரது குரலில் பதிவு செய்து ஒளிபரப்ப மேற்கத்திய ரயில்வே அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
**********************
மணப்பாறை அருகே ஆடு மேய்க்கச் சென்ற பெண், எல்லை பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப் பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
**********************
பெட்ரோல் விலை லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
**********************
உத்திரமேரூர் கோவில் பணியின் போது கிடைத்த தங்க ஆபரண நகைகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
**********************
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முக்கியமான மாகாணங்களில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்த வழக்கைஅந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
**********************
பழமையான பொருள் அரசுக்கு சொந்தம்: அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் குழம்பிஸ்வரர் கோவில் புதுப்பிக்கும் பணியின்போது தங்க
ஆபரணங்கள் கிடைத்துள் ளது. கோவிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல் 100 ஆண்டுபழைமையானதாக இருந்தால் அது அரசுக்குத்தான் சேரும்என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.