india

img

அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி....

புதுதில்லி:
இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, வங்காள விரிகுடா கடற்பகுதியில் அந்தமான் நிகோபர் தீவு பகுதிக்கு உட்பட்ட கார் நிகோபர் தீவில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலில் இருந்து இந்திய கடற்படையினரால் டிசம்பர் 1 செவ்வாயன்று காலை விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய திறன் வாய்ந்த இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. குறிப்பிட்ட இலக்கில் இருந்த கப்பலை, ஏவுகணை சரியாக தாக்கியது என்று இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.