இந்திய மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலம் தென்சால் பகுதியில் இருந்து 73 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் 6.1 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தின் ஒரு சில பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக டுவிட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.