திங்கள், மார்ச் 1, 2021

india

img

கொரோனா தடுப்பூசி: ஒவ்வாமையால் பலர் பாதிப்பு....

புதுதில்லி:
எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் பாதுகாவலர் ஒருவர் சனிக்கிழமைகொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு (ஒவ்வாமை) அலர்ஜி ஏற்பட்டதால்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.

இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், 20 வயது மதிக்கத்தக்க பாதுகாப்புக் காவலர் ஒருவர்கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண் டார். சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் அந்தக் காவலர் தனக்கு “படபடப்பு” ஏற்படுவதாகக் கூறியுள்ளார். தடுப்பூசி போடப்பட்ட 15 முதல் 20 நிமிடங்களுக்குள் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட அவருக்கு தோல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றார்.

தில்லியின் 11 மாவட்டங்களில் முதல்நாளில் 8,117 முன்களப் பணியாளர் களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 4,319 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்த நிலையில் தில்லியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 51 பேருக்கு லேசான ஒவ்வாமை ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியின் தெற்கு, தென்மேற்கு மாவட்டங்களில் 11 பேர், தில்லி. கிழக்கு தில்லியில் ஆறு பேர், புதுதில்லியில் ஐந்துபேர், வடமேற்கு தில்லியில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மத்திய மற்றும் வடக்கு தில்லியில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே தெரிய வந்துள்ளது. இவர்கள் எந்த வகையான பாதிப்புகளை சந்தித்தார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.   பொதுவாக  “லேசான ஒவ்வாமை” என்றே கூறப்பட்டுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். ஞாயிறன்று திருச்சிராப்பள்ளி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
 

;