வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

மதுரை எய்ம்ஸ்க்கு நிர்வாக இயக்குநர் நியமனம்....

புதுதில்லி:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குநராக மங்கு ஹனுமந்தராவ் என்பவர் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

மத்திய அரசு செவ்வாயன்று  4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கான நிர்வாக இயக்குநர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்தராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை, இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்கும் புதிய நிர்வாக இயக்குநர்களை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

;