வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

ஒரே நாளில் 7.8 லட்சம் கொரோனா பரிசோதனைகள்....

புதுதில்லி:
நாடு முழுவதும் ஜனவரி 23 அன்று ஒரே நாளில்  மட்டும் 7.8 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 23 சனிக்கிழமை யன்று ஒரே நாளில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 752 லட்சம் மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்றும் மொத்த கொரோனாபரிசோதனைகளின் எண்ணிக்கை 19.17 கோடியாக  அதிகரித்துள்ளது என்றும்  இந்திய மருத்துவஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
 

;