india

img

ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற நாளை கடைசி நாள்!

மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.

2016-ஆம் ஆண்டு ரூ. 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பணமதிப்பிழப்பு செய்தபோது 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் 2-ஆவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக 2,000 ரூபாய்  நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

2,000 ரூபாய்  நோட்டுகளை எந்தவித படிவம் மற்றும் அடையாள அட்டையின்றி வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவித்து, மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. 

செப்டம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.32 லட்சம் கோடி மதிப்பிலான 93 சதவிகித 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.