headlines

img

ஜூம்லாக்களின் ஆட்சியில் கணக்காவது, அறிவியலாவது!

புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று கூறி நாட்டு மக்களிடம் சரமாரியாக வாங்கிக் கட்டிக் கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கணிதத்திற்கும் அறிவியலுக்கும் சம்பந்தமில்லை என்றும், அதேபோல கணிதத்திற்கும் பொருளாதாரத்திற் கும் சம்பந்தமில்லை என்றும் உதிர்த்துள்ள முத்துக்கள், மோடி அமைச்சரவையில் எல்லோ ருமே இப்படித்தானா என்று எள்ளி நகையாட வைத்திருக்கிறது என்பது மட்டுமல்ல; கணித வியல்- அறிவியல்- பொருளாதாரம் ஆகிய வற்றை பற்றிய கோட்பாடுகள், ஆய்வுகளை பொது விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது. புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். அணுவை பிளந்தால் பெரும் சக்தி பிறக்கும் என்று இவ்வுல கிற்கு  உணர்த்தியவர் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இயற்பியலின்அடிப்படையான E=mc2 எனும் ஆற்றல் சமன்பாட்டை - சிறப்பு சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தார். ஐன்ஸ்டீன் பிறப்பதற்கு முன்பே, இன்றிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்து விட்டார் நியூட்டன். 200 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் மோடி ராஜ்ஜியத்தில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நியூட்டனின் விதிகளுக்கும் சரி, ஐன்ஸ்டீ னின் விதிகளுக்கும் சரி- அடிப்படை கணிதவி யலே. இன்னும் சொல்லப்போனால், எல்லாவித மான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஆதார மாகவும் அவற்றை விளக்குவதற்கான  விதி களை உருவாக்குவதற்கும் கோட்பாடுகளை வடிவமைப்பதற்கும் துல்லியமாக வரையறை செய்வதற்கும் அடிப்படையாக இருப்பது கணித வியலே. அதனால்தான் கணிதம் என்பது அறிவி யலின் மொழி என்கிறார்கள்.  மோடியின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றுவதற்கானவை அல்ல; மாறாக தேர்தலின் போது மக்களை கவருவதற்காக சொல்லப்படுகிற, அவர்களை உற்சாகப்படுத்து கிற வார்த்தைகள் தாம்” என்று பகிரங்கமாகவே கூறினார். எனவே இந்த வாக்குறுதிகளையெல் லாம் நீங்கள் கணக்கில் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இதற்கு ‘ஜூம்லா’ என்று பெயர் வைத்தார். தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் மோசடியான வெற்று வாக்குறுதிகள் என்று பொருள்.

இப்போது, இந்திய பொருளாதாரம் ஐந்து டிரில்லியன் டாலர் அளவிற்கு வளர்ந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் அள்ளி விட்டதை, அவர்களது ராஜ்ஜியத்தின் பொருளாதார நெருக்கடியே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஐந்து டிரில்லியன் டாலர் என்று சொன்னதெல்லாம் ஒரு கணக்கா, அதை கேள்வி கேட்கலாமா என்று துவங்கிய பியூஷ் கோயல், இதுவும் ஒரு ஜூம்லா என்று ஒப்புக்கொண்டு விட்டார். 

ஜூம்லாக்களின் ஆட்சியில் கணக்காவது, அறிவியலாவது, பொருளாதாரமாவது!?

;