headlines

img

வெற்று சவடால் வேலைக்கு உதவாது...!

பிரதமர் மோடி  இந்தியப் பொருளாதாரத்தில் புத்துயிர்ப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை அதற்கு நேர்மாறாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 12 சத விகிதமாக வீழ்ச்சி காணும் என அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு களை  மதிப்பீடு செய்து  இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ஏற்க னவே பொருளாதாரம் பல காலாண்டுகளாக மந்த நிலையிலிருந்த போது கொரோனா தொற்றும் சேர்ந்து கொண்டது. கொரோனா பொது முடக் கத்தால், உணவு மற்றும் தயாரிப்பு பொருட்க ளின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. அதன் காரண மாகப் பொருட்களின்  விலை மேலும் உயரக்கூடும். அதனைத் தொடர்ந்து  நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கும். காய்கறிகள், பருப்பு, மாமிசம், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர் வால் கடந்த ஜூலையில்  சில்லறை பணவீக்கம்  6.93 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.  இதன் தொடர்ச்சியாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 12 சதவிகிதமாக கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது.

ஆனால் நமது பிரதமரோ பொருளாதாரம் புத்துயிருப்பு பெற்றிருப்பது மட்டுமல்ல ; சமூக முடக்கக் காலத்தில் மட்டும் இந்தியா 20 பில்லி யன் டாலர் அளவிற்கு அந்நிய நேரடி முத லீட்டைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்திருந் தார். அதிலும் உண்மையில்லை. இதில் 18.4 பில்லியன் டாலர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறு வனத்தின் பங்கு விற்பனைத் தொகை ஆகும். இது ஒன்றும் முதலீடு அல்ல, பன்னாட்டு நிறுவனங்க ளுடன் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் மூலம் வந்திருக்கும் பங்கு தொகை ஆகும். 

உண்மை இவ்வாறிருக்க, நாட்டின் பிரதமர் தனது நிர்வாக தோல்வியை மூடி மறைக்க;  எதார்த்த நிலைக்கு மாறாக  தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இது மோடி க்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால் அவர் வகிக்கும் பிரதமர் பொறுப்பிற் கு அழகல்ல. தற்போது இந்தியாவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள அரசு தரப்பிலிருந்து செய்யப்படும் பொது முதலீடு மூலம்தான் ஓரளவு சரி செய்ய  முடியும் என்கிறது ஆர்பிஐ அறிக்கை.

அதாவது ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  முன்வைத்த அதே ஆலோசனையைத் தான் தற்போது ரிசர்வ் வங்கியும் கூறியிருக் கிறது. அரசு மக்கள் கையில் நேரடியாகப் பணத் தைச் சேர்ப்பதன் மூலமே நுகர்வு அதிகரித்து, உற் பத்தியும் உயரும். அதன் மூலம் பொருளாதாரம் ஏற்றம் பெறும். வருமான வரி செலுத்தாத அனை த்து குடும்பத்தினருக்கும் உடனடியாக  அடுத்த 6 மாதத்திற்கு மாதம் 7ஆயிரத்து 500 வழங்கிட வேண்டும். 2018ம் ஆண்டு அரசு புள்ளி விவ ரத்தின்படி மத்திய அரசில் காலியாக உள்ள 7  லட்சம் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். வார்த்தை பந்தல் நிழல் தராது.

;