headlines

img

சமூக ஊடகப் பயன்பாடு - பொறுப்புணர்ச்சி தேவை

சமூக ஊடகங்கள் சமீபகாலமாக பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. மக்கள் தங்களது கருத்துக்களை வெளியிடுவதற்கான மிகப்பெரிய பரந்த வெளியாக இந்த ஊடகம் பயன்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சமூக ஊடகங்களை எந்த அளவுக்கு கவனமாக பயன்படுத்த வேண் டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக பெங்களூ ருவில் நடந்த சம்பவங்கள் சாட்சியமாக உள்ளன.

பெங்களூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாசமூர்த்தி என்பவரது உறவினர் முகநூலில் சிறுபான்மை மக்களை இழிவு படுத்தும் வகையில் சில பதிவுகளை வெளி யிட்டிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துவங்கிய போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்துள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். சொத்துகள் பெருமளவு சேதப்படுத்தப்பட்டுள் ளன. இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் எழுதப்பட்டது இந்த சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. அதைத்தொடர்ந்து நடை பெற்ற வன்செயல்களும், மூன்று பேர் சுட்டுகொல்லப்பட்டிருப்பதும் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. மாநில அரசும் காவல்துறையும் நிலைமையை முன்னுணர்ந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தவிர்த்திருக்க முடியும். 

ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களைப் பொறுத்தவரை இத்தகைய வன்செயல்களை தங்களது குறுகிய அரசியல் நலனுக்கு ஆதர வாகப் பயன்படுத்தவும், வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லவுமே பயன்படுத்து கின்றனர்.

எந்தவொரு பிரிவினருக்கு எதிராகவும் விஷமத்தனமான அவதூறுகள் பரப்பப்படும் போதும் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பது இல்லை. அப்படி எடுக்கப்படும் நடவடிக்கையிலும் பாரபட்சமான அணுகுமுறை காணப்படுகிறது.

மதவெறி, சாதிவெறியை கிளப்பிவிட சிலர்  திட்டமிட்டு சமூக வலைத்தளங்களை பயன் படுத்துகின்றனர். அரசுக்கு எதிராக விமர்சனங் களை முன்வைப்பவர்கள் மீது உடனுக்குடன் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன. அவர்களது சமூக ஊடகக் கணக்கு கள் உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. ஆனால் மதவெறி கருத்துக்களை பரப்பு பவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டாலும் உட னுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 

குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் போக்கு சமூக ஊடகத்தில் அதிகரித்து வருவது கவலை யளிக்கிறது. சமூக ஊடகம் தவிர்க்க முடியாத ஒரு துறையாக வளர்ந்து வரும் நிலையில் ஆரோக் கியமாக அதைப் பயன்படுத்த அனைவரும் முன் வர வேண்டும். அதே நேரத்தில் மக்களை பிளவு படுத்தும் வகையில் வெளிவரும் கருத்துக்களை கண்காணிக்க, கட்டுப்படுத்த விரிவான கட்ட மைப்பு தேவையாகிறது. அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை பாரபட்சம் அற்றதாக இருப்பதும் அவசியமாகிறது.

;