headlines

img

கூடினார்கள்... கலைந்தார்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டப்படுவது என்பது அபூர்வமான ஒன்றுதான். ஜனநாய கப்பூர்வமான செயல்பாட்டிற்கும், அதிமுக விற்கும் ஏழாம் பொருத்தம். முன்பு ஜெயலலிதா சொல்லியபடிதான் அந்தக் கட்சியில் எல்லாம் நடக்கும். தற்போது பாஜகவினரின் கண்ஜாடைக் கேற்பவே அதிமுக அரசும் கட்சியும் நடந்து கொள்கிறது.

ஆர்எஸ்எஸ் ஆசாமியான குருமூர்த்தி, நான் சொல்லிக் கொடுத்தபடிதான் ஓ.பன்னீர்செல் வம் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தி னார் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். ஆனால் அதற்கு அதிமுக தரப்பில் எவ்வித கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஏனென்றால் நடந்தது அதுதான். அதனால்தான் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. தற்போது நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வில் மோடி அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதற்கு நன்றி என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் மோடியின் முந்தைய ஆட்சியில் நடப்பட்ட அடிக்கல் அப்படியே நிற்கிறது. பணமும் ஒதுக்கப்பட வில்லை. பணியும் நடக்கவில்லை. இதை தட்டிக் கேட்க திராணியில்லாத அதிமுக அடிக்கல் நாட்டி யதற்கே பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது.

நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டுமென் றும் மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப் படுத்த வேண்டுமென்றும் மத்திய அரசை வலி யுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு என்பது ஒரு அப்பட்டமான மோசடி. தமிழகத்திற்கு முற்றிலும் எதிரானது என்று நன்றாக தெரிந்துவிட்டது. உயர் நீதிமன்றமும் நீட் தேர்வு அவசியம் தானா என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழக சட்டமன்றம் நீட் தேர்விலி ருந்து விலக்கு கோரி அனுப்பிய தீர்மானங்களை மோடி அரசு புறங்கையால் தள்ளி விட்டு விட்டது. மேலும் சில மருத்துவக் கல்லூரிக ளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள தற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடருமானால் இந்த மருத்துவக் கல்லூரிக ளால் தமிழ்நாடு மாணவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இப்போதும் கூட நீட்டிலிருந்து விலக்கு கேட்டு  அவர்களிடம் இறைஞ்சி  தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக. மேலும் மருத்துவப் பட்ட மேற்படிப்பு சேர்க்கையில் தமிழகம் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வஞ்சிக் கப்படும் போதும் ‘சமூக நீதி காத்த’ வீராங்கனை யின் வழிவந்தவர்களால் தீர்மானம் போடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஆத ரவாக சூறாவளி வீசப்போகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் பேசியுள்ளார். பாஜகவின் துணை அமைப்புப் போலவே அதிமுக செயல்படுமானால் சூறாவளி யால் அந்தக் கட்சி கடுமையான பாதிப்பை அடைய  வேண்டியிருக்கும்.

;