headlines

img

அதிகாரப் பசியால் அநீதி

 கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மோடி அரசு தன்னுடைய பல்வேறு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி வருகிறது.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வரு டங்களுக்கு (2020- 21, 2021-22) நிறுத்தி வைப்பதாக தன்னிச்சையாக அறிவித்தது மோடி அரசு. மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்க ளவை உறுப்பினர்கள் தங்களது மாநிலங்களில் மேம்பாட்டு பணிகளுக்குத்தான் தங்களது தொ குதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துகின்றனர்.  கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் உட்பட பல உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை மருத்துவமனை மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஒதுக்கினர். இத னால் மாநிலஅரசுகளின் சுமை ஓரளவு பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

இந்நிலையில் ஏற்கெனவே இரண்டு ஆண்டு களுக்கான நிதியை நிறுத்தி வைத்த மோடி அரசு தற்போது 2019- 20 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கைவைத்துள்ளது. இதற் கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில் இந்த நிதியும் ஒதுக்கப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இது முற்றிலும் அநீதி யான ஒன்றாகும். கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கி னால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தைச் சமாளிக்க மாநில அரசுகள் கேட்கும் நிதியை ஒதுக்க மத்திய பாஜக கூட்டணி அரசு மறுக்கிறது.  தமிழகத்தைப் பொறுத்தவரை மோடிஅரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில் நாட்களை நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு இதை தட்டிக் கேட்க திராணியின்றி திகைத்து நிற்கிறது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கி 12 ஆயிரம் கோடி, திட்டமானியம் ரூ.10 ஆயிரம் கோடி போன்ற வற்றை தர மத்திய அரசு மறுக்கிறது.

இதை மக்களிடம் எடுத்துச் சொல்லக்கூட தைரிய மின்றி தமிழக அதிமுக அரசு, ஒட்டுமொத்த சுமை யையும் மாநில மக்கள் மீது மடைமாற்றம் செய்கிறது. மறுபுறத்தில் புதிய மின்சார சட்டத்திருத்தம் 2020 மூலம் மின்துறையில் மாநிலங்களின் அதிகா ரத்தை கபளீகரம் செய்கிறது மோடி அரசு. பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தை எடுத்துக் கொள் வதோடு, மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த மின்துறையையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் மத்திய அரசு எடுத்துக் கொள்ள முயல்கிறது. இதனால் தமிழ கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாயிக ளுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் ரத்தாகும் அபாயம் உள்ளது.  இந்த இடர்பாடான காலத்தை பயன்படுத்தி மத்தியில் அனைத்து அதிகாரங்களையும், நிதியா தாரங்களையும் குவிப்பதில்தான் மோடி அரசு கவனம் செலுத்துகிறதே அன்றி மக்களை பாதுகாப்பதில் அல்ல.

;