headlines

img

சொன்னதை செய்யாததற்கு என்ன தண்டனை?

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் மருத்துவர்களின் பணியிட மாற்றம் திரும்பப் பெறப்படாது என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கூறிய  உறுதிமொழிகளை நிறைவேற்றாததால்தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட நேர்ந்தது. 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஐந்தாண்டு க்கு ஒருமுறை ஊதியம் மறுசீரமைப்பு  செய்யப் படும் என்று கூறியிருந்தது. 

ஆனால் 2017 வரை அது தொடர்பாக எந்த நட வடிக்கையும் எடுக்காததால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மூவர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றே கூறியது.  ஆயினும் தமிழக அரசு வழக்கம் போலவே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது. 

அதனால் 2018ல் மருத்துவர்கள் நீதிமன்றத் தில் முறையிட்டபோது அவர்களது கோரிக் கையை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. அப்போது ஆறு வார காலம் அவகாசம் கேட்ட அரசு அதன்பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் இந்தாண்டு அக்டோபர் 25 முதல் மருத்து வர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையிலும் கூட, மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் பற்றி எந்த அசை வும் அரசிடமிருந்து வரவில்லை. ஆனால் போராட் டத்தை ஒடுக்குவதற்காக 60 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பணி முறிவு செய்யப்படும் என்று மிரட்டப்பட்டனர். அடக்கு முறையினால் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக அரசு எண்ணியது. ஆயினும் மருத் துவர்கள் நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் கையெழுத்திடாமல் அவசர அவசிய சிகிச்சைகளை மேற்கொண்டனர். 

இந்நிலையில் பொது நன்மை கருதி தங்கள் போராட்டத்தை மருத்துவர்கள் விலக்கிக் கொண்டனர். ஆயினும் கூட தமிழக அரசும், மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பழிவாங்கு வதற்கான காரியத்தில் இறங்கியுள்ளது. போராட் டக்காலத்தில் எத்தனை பேர் எத்தனை நாள் பணிக்கு வரவில்லை என்று கணக்கெடுப்பதாகவும், சுகாதா ரத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. 

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மருத்து வர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமென்றால் போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு காரணமான தமிழக அரசு மீது என்ன நடவடிக்கை எடுப்பது? 

மத்திய அரசாங்கம் மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை உடனடியாக நடைமுறைப்படுத்தும் தமிழக அரசு மத்திய அரசின் ஊதிய விகிதத்தை மருத்துவர்களுக்கு வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? எனவே பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குவதை கைவிட்டு அரசு கொடுத்த உறுதி மொழிகளை நிறைவேற்றுவதே பிரச்சனைக்கு சரியான தீர்வாகும்.

;