headlines

img

இளைஞர்களைக் கவர்ந்த தேர்தல் அறிக்கை

இடது முன்னணி சார்பில் திரிபுரா மாநிலத் திற்கான தேர்தல் அறிக்கையை இடது முன்னணி  தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். வாக்காளர் கள், குறிப்பாக இளைஞர்கள், மத்தியில் இந்த  அறிக்கை சாதகமான கருத்தை உருவாக்கி யுள்ளது. அதில் உள்ள நல்ல உறுதிமொழிகளும், அவற்றை நிறைவேற்றுவதில் இடதுமுன்னணி கடந்த காலங்களில் காட்டிய உறுதியுமே அதற்குக் காரணமாகும். நிர்வாகத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்பு வோம் என்பதும், தற்காலிக ஊழியர்களின் பணிக்காலம் முறைப்படுத்தப்படும் என்பதும் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு அகவிலைப்படியை இடது முன்னணி தவறாமல் தந்து வந்தது. முன்பைப் போன்று அது தரப்படும். 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, இளைஞர்களுக்குத் தொடர்ச்சியான இடை வெளிகளில் வேலைவாய்ப்புகள் தந்து வந்தது என்பதால் வேலையற்ற இளைஞர்கள் மத்தியில் இடது முன்னணியின் தேர்தல் அறிக்கை உற்சாகத்தைத் தந்துள்ளது.

“கடந்த கால இடது முன்னணி ஆட்சி இயங்கிய விதத்தால் இந்த உறுதிமொழிகள் எல்லாம் நம்பத்தகுந்தவையாக இருக்கின்றன. ஊழியர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர் களின் வாழ்க்கையை கடந்த ஐந்து ஆண்டுகால  பாஜகவின் ஆட்சி சிதைத்து விட்டது. அரசுப்  பணிகள் நம்பத்தகாத தனியார் நிறுவனங்களு க்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் தாரை  வார்க்கப்பட்டுள்ளன. அகவிலைப்படி தரப்படா மல் உள்ளது என்று அரசு ஊழியர் சங்கத்தலைவர்கள் குமுறுகின்றனர். 

இடதுமுன்னணியின் உறுதிமொழிகளில், “வேலையில் இருந்து நீக்கப்பட்ட 10 ஆயிரத்து 323 பேருக்கும் மீண்டும் வேலை தரப்படும்” என்பது பெரும் அளவில் மக்களைக் கவர்ந்திருக் கிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளை தவறாக அர்த்தப்படுத்தி அவர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டார்கள். இதில் சுமார் 150 பேர் இறந்துவிட்ட னர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் இடதுமுன்னணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

மக்களைக் கவர்ந்துள்ள மற்றொரு உறுதி மொழி, மாதத்திற்கு 50 யூனிட்டுகள் வரையில்  அதிகபட்சமாக மின்சாரத்தைப் பயன்படுத்து வோருக்கு கட்டணம் இல்லை என்பதாகும். மாநிலத்தில் உள்ள ஏராளமான ஏழை மக்களுக்கு இது பயனளிக்கும். கிராமப்புறங்களில் 200 நாள்  வேலைத் திட்டம் என்பது கிராமப்புற ஏழ்மைக்குத் தடைபோடும். இவற்றைத் தாண்டி, தன்னாட்சி மாவட்டக் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது மற்றும் கூடுதல் நிதியை ஒதுக்கு மாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்வது உள்ளிட்டவை பழங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரதிபலிப்பதாக உள்ளது.

இடதுமுன்னணியின் இந்தத் தேர்தல் அறிக்கையை மாநில ஊடகங்களும் பாராட்டி யுள்ளன. பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக தேர்தல் களத்தில் இடதுமுன்னணியின் தேர்தல் அறிக்கையும் சுழலும் என்பது திண்ணம்.

;