headlines

img

ஏர்ப்படையின் எச்சரிக்கை

2014 நாடாளுமன்ற தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவ தாகவும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு விலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்பதாண்டு காலம் ஆனபின்பும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்ப தைவிட அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தி லேயே அரசின் சார்பில் கூறப்பட்டது நினைவு  கூரத்தக்கது. 

குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக விவசாய விரோத சட்டங்கள் மூன்றையும் மோடி அரசு தனக்குரிய அதிகார பலத்துடன் விவாதங்கள் நடத்தக்கூட வாய்ப்பு தராமலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதை எதிர்த்தும், அவற்றை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. 

இந்தப் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. தலைநகர் தில்லியின் எல்லை களில் 2020 ஆகஸ்ட் 9 முதல் 2021 டிசம்பர் 11 வரை மழை, குளிர், வெயில், கொரோனா எதையும் பாராமல் 740 விவசாயிகளின் உயிர் தியாகத்து டன் ஓராண்டு காலத்திற்கும் மேலாக விவ சாயிகளின் அறப்போர் தொடர்ந்தது. அதனால் வேறு வழியின்றியும் சில மாநில தேர்தலையொட்டியும் ஒன்றிய அரசு மூன்று திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஆனால் விவசாயிகளின் விளை பொரு ளுக்கு கட்டுப்படியாகும் விலை நிர்ணயச் சட்டத்தை கொண்டு வருவதற்கு எந்த வகையான அசைவும் இல்லை. அத்துடன் விவசாயிகள் மீதான வழக்குகளை கைவிட வேண்டுமென்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அத்து டன் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிதி வழங்கலும், உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கேரி யில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த ஆசிஷ்மிஸ்ராவின் தந்தை ஒன்றிய  அமைச்சர் அஜய் மிஸ்ராவை அமைச்சரவையி லிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் நிறைவேற்றப்படவில்லை. 

இதனால் மார்ச் 20 அன்று தில்லியில் விவ சாயிகள் மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு அதில் ஒன்றிய அரசுக்கு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது. தங்களது கோரிக்கை களை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட் டம் நடத்தப்படும் என்றும், இந்த போராட்டம் ஏற்கெனவே நடந்த போராட்டத்தை விட தீவிர மாக இருக்கும் என்றும் அதற்கான தயாரிப்பு கள் ஏப்ரல் 20 வரை இந்தியா முழுவதும் நடை பயணம், மகா பஞ்சாயத்துகள், மாநாடுகள் மூலம் செய்யப்படும் என்றும் அனைத்து விவ சாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் தர்ஷன் பால்சிங் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக் கையை மோடி அரசு கண்டு கொள்ளாமல் போனால் விவசாயிகள் போராட்டம் மீண்டும் தீவிரமாகும்.

 

;