headlines

img

பாஜக ஆணையமா தேர்தல் ஆணையம்?

இந்திய தேர்தல் முறையில்  ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதில் தலைமைத் தேர்தல் ஆணை யத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.  ஆனால் மோடி 2014 ல் பிரதமராக பதவியேற்ற பின்னர்   தேர்தல் ஆணையம் பாஜக சார்பு நிலை எடுப்ப தாக பரவலாக புகார்கள் எழுந்தன. அந்த புகார்கள் ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த செயல் பாடுகள் இருந்தன. இந்நிலையிலேயே பாஜகவிற்காக தேர்தல் ஆணையம் தனது விதியையே மாற்றியி ருப்பது  மக்களிடம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.  

ஏற்கனவே  தேர்தல் ஆணையம் வாக்கு இயந் திரத்தின் மூலம் பாஜக மோசடி செய்து வெற்றி பெற உதவியிருக்கிறது என்ற புகார் இருந்து வந்தது. இதனை தேர்தல் ஆணையம் மறுத்தது. அதோடு வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு பணிக் காக எந்த ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை எனக் கூறியது. ஆனால் டி&எம் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறு வனத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியி ருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

2019 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கிற் கும் எண்ணப்பட்ட வாக்கிற்கும் இடையே 373  தொகுதிகளில் வேறுபாடு இருந்தது. அதற்கு இன்று வரை தீர்வு இல்லை.  இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் நிலை தேர்தல் ஆணையத்தின் உண்மை முகத்தை வெளிச்ச மிட்டு காட்டியிருக்கிறது.  சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங் அமைச்சராக இருந்த போது கறவை மாடுகள் வாங்கிய ஊழலில் உச்சநீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். கடந்த  2018 அக்டோபர் 10 அன்று விடு விக்கப்பட்டார். தேர்தல் விதிமுறைகளின் படி ஊழல் குற்றச்சாட்டில் ஒரு வருடம் தண்டனை பெற்றவர் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. 

இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற சிக்கிம் சட்டமன்ற தேர்தலில்  பிரேம்சிங் தமாங் கின் கட்சியான சிக்கிம் புரட்சிகர கட்சி மொத்த முள்ள 32 இடங்களில் 17 இடங்களை கைப்பற்றி யது. அப்போது சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிந்தே  அக்கட்சி   பிரேம்சிங் தமாங்கை  முதல்வராக பதவியேற்க செய்தது.  இதனை ஆட்சேபிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்தது. அப்போதே பலரும் கேள்வி எழுப்பினர்.

 

;