headlines

img

‘தயார் நிலை’யில் இருக்கிறதா இந்தியா? - அ.குமரேசன்

ஐஏஎஸ் அதிகாரிகள் சொல்வது என்ன?

கண்ணுக்குத் தெரியாத, ஆனால் கண்கூடான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டி ருக்கிறது கொரோனா கிருமி. அதனை வீழ்த்துவதற்கு ஒரு உலக யுத்தமே நடந்துகொண்டிருக்கிறது. இந்தியா வும் அந்த யுத்தத்தில் இணைந்திருக்கி றது.

இந்நிலையில் கொரோனா கிருமி யை முறியடிப்பதிலும், அதனால் ஏற் படும் கோவிட்-19 நோயை வெல்வதி லும் இந்தியா எந்த அளவுக்குத் தயா ராக இருக்கிறது? இருக்கிற தயார் நிலை என்னவென்று தெரிந்தால்தான் இனி ஏற்படுத்த வேண்டிய தயார்நிலை பற்றிய தெளிவான முடிவுகளுக்கு வர முடியும். இதற்காக “கோவிட்-19 தேசிய தயார்நிலை ஆய்வு” ஒன்று நடத்தப்பட் டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிர் வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர் துறை (டீஏஆர்பிஜி) இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. மார்ச் 25 தொடங்கி 30 வரையில் நடை பெற்ற இந்த ஆய்வில் நாடு முழுவதும் பணியாற்றிக்கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறை களின் ஐஏஎஸ் அதிகாரிகள் (2014-18 அணியினர்) 410 பேர் பங்கேற்றுப் பதி லளித்துள்ளனர். 266 முழுமையான அறிக்கைகள் தாக்கலாகியுள்ளன.

மாவட்டங்களில் உள்ள கொரோனா பரிசோதனை வசதிகள், தற்காலிகக் கூலித் தொழிலாளர்கள் வெளியேறும் நிலை, வெளிநாடுகளிலி ருந்து வந்தவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களைத் தொடர்புகொள்ளும் ஏற் பாடுகள், பொது இடங்களில் கிருமி யொழிப்பு நடவடிக்கைகள், மக்க ளுக்குக் கட்டாயத் தேவையாக உள்ள பொருள்களும் சேவைகளும் கிடைக் கும் வாய்ப்புகள் ஆகியவை உள்ளிட்ட தகவல்கள் இந்த ஆய்வில் கேட்டறியப் பட்டன.

தற்போதைய ஊரடங்கு நட வடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது முத லான மக்களின் பங்கேற்பை அங்கீ கரிக்கிற இந்த ஆய்வு, எந்த வகை யான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்பன வற்றையும் முன்வைக்கிறது.

தற்போதைய ஊரடங்கு நட வடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது முத லான மக்களின் பங்கேற்பை அங்கீ கரிக்கிற இந்த ஆய்வு, எந்த வகை யான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்பன வற்றையும் முன்வைக்கிறது.

பொதுவாக மத்திய – மாநில அரசாங்கங்கள் சரியான நடவடிக்கை களை மேற்கொண்டிருப்பதாக 80 முதல் 85 சதவீதம் வரையிலான அதி காரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், குறிப்பான கேள்விகள் என்று வருகிற போது, அவர்களின் பதில்கள் இனி அரசாங்கங்கள் என்ன செய்யப் போகின்றன என்று கேட்க வைப்ப தாக உள்ளன.

மருத்துவமனைக் காட்சிகள்

எடுத்துக்காட்டாக, மருத்துவ மனைகளின் தயார்நிலை போதுமான அளவுக்கு இருக்கிறது என்று தெரி வித்திருக்கிற ஆட்சிப்பணி அதிகாரி கள் 40 சதவீதத்தினர்தான். 60 சத வீதத்தினர் தங்கள் பகுதிகளின் மருத்து வமனைகளில் நிலைமை அவ்வாறு இல்லை என்று கூறியுள்ளனர். மாவட்ட மருத்துவமனைகளிலும் மாவட்டத் துணைநிலை மருத்துவமனைகளிலும் முகமூடி, கையுறை உள்ளிட்ட தனி மனித பாதுகாப்புக் கருவிகள் (பிபிஇ) போதுமான அளவுக்கு இல்லை என்பது கவலைக்குரிய நிலைமை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கிருமி தொற்றியவர்களைத் தனி மைப்படுத்தி வைத்து சிகிச்சையளிப்ப தற்கான தனிமைப் பிரிவுகள் (ஐசொ லேசன் வார்டுகள்) போதுமான அள வுக்கு இருக்கின்றன என்று 50 சத வீத அதிகாரிகள்தான் கூறியிருக்கிறார் கள். 28 சதவீதத்தினர் போதுமானதாக இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கி றார்கள். மீதியுள்ள 22 சதவீதத்தினர் இது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்க வில்லையா அல்லது “ஏதோ இருக்கி றது” என்ற தொனியில் பதிலளித்தார் களா என்று தெரியவரவில்லை.

மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்) வேண் டிய எண்ணிக்கையில் இல்லை. இது கவலைக்குரிய மற்றொரு நிலைமை என்று பலரும் கருதுகின்றனர். தேவைப் படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கான தீவிர கவ னிப்புப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் போதுமான அளவுக்கு இருக்கின்ற னவா? அப்படியெல்லாம் இல்லை என 59 சதவீத அதிகாரிகள் மறுத்துள்ள னர். சான்றாக, அஸ்ஸாம் மாநிலத்தின் நல்பாரி, டிமாட்லாசாவோ மாவட்டங் களின் மருத்துவமனைகளில் ஐசியு பிரிவே இல்லை. சுவாசக் கருவியும் இல்லை.

அசாமுக்குப் போவானேன், வளர்ச்சிக்கான மாடல் மாநிலமாகச் சித்தரிக்கப்படும் குஜராத்தில், அக மதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுதான் நடப்பு நிலைமை.

சாதாரண தகவல் அல்ல

மருத்துவமனைகளின் தயார்நிலை யும் உள்கட்டமைப்பும், தொற்றுடை யோரை விலக்கி வைத்திருப்பதற் கான தனிமைப்பிரிவு வசதிகள், பரி சோதனை வசதிகள், பாதுகாப்புக் கருவிகள், மக்களிடையே முழுமை யான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பற்றிய முழு விவரங்களை சேக ரித்து வைத்திருப்பதோடு அவர்க ளைக் கண்டறிவதற்கான முனைப்பான ஏற்பாடுகள், தற்காலிகத் தொழிலாளர் களும் கூலித் தொழிலாளர்களும் வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல், பொது இடங்களில் கிருமியொழிப்பு ஏற்பாடுகள், மக்களின் கட்டாயத் தேவைப் பொருள்களும் சேவை களும் உறுதிப்படுத்தப்படுதல் ஆகிய பணிகளில் கவலையளிக்கும் அள வுக்கு இடைவெளிகள் இருக்கின்றன என்று நிர்வாகப் பணியில் ஈடுபட்டி ருக்கும் இந்த அதிகாரிகள் கூறியிருப் பது சாதாரண தகவல் அல்ல.

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய வர்களை அடையாளங்கண்டு பரி சோதனைக்கு உட்படுத்துவது சவா லாக இருக்கிறது என்று ஆந்திர மாநில மாவட்டங்களின் அதிகாரிகள் கூறி யுள்ளனர். அருணாசலப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் மாநிலங்களின் அதி காரிகள் போதிய கருவிகள், ஐசியு வசதிகள் இல்லை என்று தெரிவித்துள் ளனர். தில்லி மாவட்டங்களின் ஆட்சி யர்கள் போதுமான சோதனைக் கருவி கள் தேவை என்று வலியுறுத்தியுள்ள னர். இமாச்சலப்பிரதேசம், ஹரி யானா, மஹாராஷ்டிரா, மத்தியப் பிர தேசம், ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் மாவட்ட அதி காரிகளும் கிட்டத்தட்ட இதே நிலைமை களைத்தான் தெரிவித்து, தங்கள் தேவைகளை முன்வைத்திருக்கிறார் கள்.

கட்சிகளின் குரல் எதிரொலிப்பு

இத்தகைய நிலைமையில் மத்திய அரசு செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி கடைசியாகக் கேட்கப்பட்டி ருக்கிறது.  இதற்கு வந்துள்ள பதில்கள்: 

மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டிச் செல்ல நேரிடும் மக்களுக்கு உதவுவதற்கான சீரான வழிகாட்டல் நடைமுறைகளை உருவாக்கிச் செயல் படுத்த வேண்டும். மருத்துவக் கருவி கள் கொள்முதல், போக்குவரத்து, விநி யோகம் ஆகியவை தொடர்பான பிரச்ச னைகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் துணைநிலை மருத்துவமனைகளிலும் பரிசோதனை மையங்களை உரிய வசதிகளோடு ஏற்படுத்த வேண்டும்; விரைவான இடையூறற்ற சிகிச்சைகளை உறு திப்படுத்த வேண்டும்; தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரங்களின் குடி சைப்பகுதிகளிலும், பின்தங்கிய கிரா மங்களிலும் அதிகமான விழிப்பு ணர்வுப் பரப்புரைகள் நடத்தப்பட வேண்டும். பரிசோதனைக் கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப் படுவதை ஊக்குவிக்க வேண்டும். கள்ளச்சந்தை முளைப்பதைத் தடுக்க கட்டாயத் தேவைப் பொருள்களின் விலைகள் குறித்த தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலா ளர்கள், அன்றாடக் கூலித் தொழிலா ளர்கள் ஆகியோருக்குப் பணமாக உதவுவதற்கு வழிசெய்ய வேண்டும்.

மத்திய அரசு என்ன செய்ய வேண் டும் என்ற கேள்விக்கான அதிகாரிகளது பதில்கள், தொடக்கத்திலிருந்தே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பிற அரசி யல் இயக்கங்களும் வலியுறுத்தி வரு வதை எதிரொலிக்கின்றன அல்லவா? இது ஏதோவொரு தன்னார்வ நிறு வனத்தின் ஆய்வறிக்கை அல்ல. மத் திய அரசின் ஒரு துறையால் மேற் கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான ஆய்வு. மக்களோடு நேரடித் தொடர் பில் இருக்கும் நிர்வாக அதிகாரிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி, தேவைப்படும் நடவடிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். இந்த இருட்டுப் பகுதிகளில் முழு கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற் படுத்துவதற்குப் பதிலாக விளக்கேற்று வதால் அல்லது மெழுகுவர்த்தி கொளுத்துவதால் அல்லது மொபைல் போன் டார்ச் எரியவிடுவதால் எங்கி ருந்து வெளிச்சம் வரும் பிரதமர் அவர் களே?


 

;