headlines

img

சாதியை எரிக்க வேண்டும் ஒரு சுடுகாடு

 அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே சுடுகாடு என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப் படும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளது தமிழ கத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒன்றாகும். மத்தியில் உள்ள மோடி அரசு எதற்கடுத்தா லும் ஒரே நாடு என்று கூறி பல்வேறு திட்டங்க ளை நாசம் செய்து வருகிறது. ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு, ஒரே மாதிரியான வரி என்றெல் லாம் வாய்ஜாலம் காட்டுபவர்கள் அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே சுடுகாடு என்பது குறித்து வாய் திறப்பது இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த அநீதியை நியாயப்படுத்த முயல்கின்றனர். வர்ணாசிரம அநீதியை நியாயப்படுத்துகிற குரல்கள் சமீப காலமாக அதிகரித்து வரு கின்றன. மக்களவை சபாநாயகர் என்ற உயர்ந்த பொறுப்பில் உள்ள ஓம் பிர்லா, ராஜஸ்தானில் நடை பெற்ற பிராமணர் சங்க மாநாட்டில் பேசும்போது பிராமணர்கள் பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்றும் மற்ற சமூகங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் கள் என்றும் கல்வியையும் மதிப்புகளையும் பரப்பு வதில் மற்றவர்களை விட முன்னணியில் உள் ளார்கள் என்றும் உளறியுள்ளார்.  ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பிறப்பினாலேயே உயர்ந்தவர்கள் என்று பிதற்றுவார்களேயானால், மற்றவர்களை பிறப்பினால் தாழ்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள் என்பதே பொருளாகும். மனுவின் குரலிலேயே இந்த நவீன காலத்திலும் இவர்கள் பேசி வருவது சகிக்க முடியாதது.  ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை ஓங்கி உரைக்க வேண்டிய காலத்தில், இறந்த பின்னும் கூட சாதி பார்த்து தனித்தனி சுடுகாடு, இடுகாடு இருப்பது மனிதகுல நாகரிகத்திற்கே அவமானமாகும். குஜராத்தை இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று மோடி தம்பட்டம் அடித் தார். அந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்லியே மத்திய ஆட்சியதிகாரத்தையும் பாஜக கைப்பற்றி யது. ஆனால் குஜராத்தில் அனைத்து கிராமங்க ளிலும் தலித்துகளுக்கு தனி சுடுகாடு உள்ளது என்று நவஜீவன் டிரஸ்ட் எனும் அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது. தமிழகமும் கூட இதற்கு விதி விலக்கல்ல. சாதி கொடுமைகளுக்கு எதிராக பேசிய திராவிட கட்சிகளும் கூட இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை. மாநில அளவிலான மாநாடுக ளில் எதிரொலித்த சாதி எதிர்ப்பு முழக்கம் கிராமங்க ளுக்கு சென்றவுடன் சுருங்கி விடுவதையே பார்க்கிறோம்.  கர்நாடகத்தில் தனித்தனி சுடுகாடு முறை ஓரளவு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளது கவனிக்கத்தக் கது. தமிழகத்தில் அனைத்து சமூகத்தினருக் கும் ஒரே சுடுகாடு என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். சமூக நீதி போர்க்களத்தில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வெற்றி கண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பு இதற்கு உதவும் என்பது திண்ணம்.

;