headlines

img

கோவிட் 19ன் பிறப்பு

அமெரிக்காவில் சுமார் 7 லட்சம் பேர் உட்பட  உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறிக்கவும், வரலாறு காணாத துயரத்தை ஏற்படுத்தவும் காரணமான கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது தொடர்பான ஆராய்ச்சி, மருத்துவ விஞ்ஞானிகள் மத்தியில் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. 

அதில் மிகத் துல்லியமாக கோவிட் 19 எனப்படும் “சார்ஸ் - கோவி - 2” என்ற வைரஸ் உருவானதற்கான வழித்தடத்தை பிரெஞ்சு பாஸ்டியர் இன்ஸ்ட்டியூட் மற்றும் லாவோஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது இந்த ஆராய்ச்சியில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் ஆகும். இந்த ஆராய்ச்சி விபரங்கள் இன்னும் முழுமையாக அச்சில் வெளிவரவில்லை. 

“சார்ஸ் - கோவி - 2” வைரசுக்கு முந்தைய இதே வகை வைரஸ்கள் ஒரு குழுவாக உருவா னதை இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். “சார்ஸ் - கோவி - 2” வைரஸ் வெகு வேகமாக மனி தர்களுக்குள் நுழைவதற்கான ‘ஏற்பி’களை பெற்றிருந்ததுதான், மற்ற வைரஸ்களை விட இது ஆபத்தான ஒன்றாக மாறியதற்கு அடிப்படை காரணமாக இருந்தது. ஆனால் இதற்கு முன்பே இத்தகைய ஏற்பிகளை கொண்ட இதே வகை வைரஸ்கள் கடந்தாண்டு - அதாவது 2018ல் உருவாகியிருந்தன என்றும், அதன் பிறழ்வுதான் “சார்ஸ் - கோவி - 2” என்றும் அதைத் தொடர்ந்து புதிய புதிய டெல்டா வகைப் பிறழ்வுகள் உருவாகி யுள்ளன என்றும், எனவே இது இயற்கையில் உரு வான வைரஸ் பிறழ்வுகளின் தொடர்ச்சியே என்றும் இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

ஏற்பிகளைக் கொண்ட முந்தைய வைரஸ்கள் இரண்டு அல்லது மூன்று பிறழ்வுகளுக்கு உள்ளா கித்தான் “சார்ஸ் - கோவி - 2” உருவாகியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் தொற்று நோயியல் துறையின் தலைவர் பேரா.ஸ்டூவர்டு நீல், கோவிட்19 வைரசின் வரலாறு எதிர்காலத்தில் மனித குலத்தின் மீது இதே போன்ற ஏற்பிகளை கொண்ட வைரஸ்கள் வெவ்வேறு வடிவங்களில் நேரடியாக தாக்குதலை நடத்தக்கூடும் என்பதை உணர்த்துவதாக குறிப்பிடு கிறார். 

“சார்ஸ் - கோவி - 2” வைரசின் உருவானது குறித்த புதிய விவரங்கள் பற்றி குறிப்பிடும் ஒரு விஞ்ஞானி, இந்த வைரஸ் சீனாவில் உள்ள உகான் வைரஸ் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டு வெளியில் கசிய விடப்பட்டதாக கட்டமைக்கப்பட்ட அரசியலை நொறுக்குகிறது என்று குறிப்பிடுகிறார். 

அரசியல் அரங்கில், வைரஸ் எப்படி உரு வானது என்பதைப்பற்றி வாத, பிரதிவாதங்கள் நடக்கலாம்; ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்ளலாம்; ஆனால் விஞ்ஞான சமூகத்தில் கோவிட் 19 வைரசின் பிறப்புப் பற்றி எந்த விவாதமும் இல்லை; ஏனென்றால் ஒரு வைரசின் புதிய வகைக ளும் அடுத்தடுத்த பிறழ்வுகளும் தொடர்ச்சியாக உரு வாகி கொண்டே உள்ளன; நவீன சமூகத்தில் விலங்கு களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்கள் இயற்கைப் பிறவிகளாகவே உருவாகின்றன என்பதில் மருத்துவ உயிரியல் விஞ்ஞானிகளுக்கு எந்த சந்தே கமும் இல்லை என்கிறார் அவர். அமெரிக்க ஊதுகுழல்களுக்கு இந்த தகவல் சமர்ப்பணம்.

;