headlines

img

நீதிமன்றத்திற்கு வெளியே

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதியளித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஐந்து நீதி பதிகள் கொண்ட அமர்வு விரிவடைந்த ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை கோவில் மட்டுமின்றி மதவழி பாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான அனைத்து மனுக்களும் ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

சபரிமலைக் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று கடந்தாண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதை மறு பரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஐந்து பேர் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளான ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திர சூட் ஆகியோர் மறு பரிசீலனை செய்ய தேவை யில்லை என்றும் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை உறுதியாக அமல்படுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில்  சில சந்தேகங்களும், குழப்பங்களும் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து சட்ட நிபு ணர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தற்போது தடையேதும் விதிக்கப்படவில்லை. ஏழு பேர் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு சொல்லும் வரை தற்போதுள்ள நிலை தொடரும். அதாவது சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடை எதுவும் இல்லை.

அயோத்தி தாவா நிலம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்படியே ஏற்க வேண்டும் என்று கூறிய பாஜக பரிவாரம் தற்போது அனைத்து வயது பெண்களையும் அனு மதிக்கக்கூடாது என்று கூறுவது விசித்திரமானது. எந்த ஒரு தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாக இருந்தால் நீதிமன்றமே கூறிவிட்டது என்பதும், இல்லையென்றால் இதை ஏற்க முடியாது என்பதும் பாஜகவின் வழக்கமாகவே உள்ளது.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதிக்குள் பால ராமர் சிலையை வைத்ததும், மசூதியை இடித்ததும் சட்டவிரோதம் என்றும் உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. ஆனால் மசூதியை இடித்தவர்களை தேச பக்தர்கள் போல சித்தரிக்கிறது பாஜக பரிவாரம். 

தற்போது நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்த வேண்டிய நிலையில் கேரள அரசு உள்ளதால் அதற்கெதிராகப் பேசுவது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசுவதாகவே  பொருள்படும். கேரள மாநில காங்கிரஸ் கட்சியும் கூட இதே கருத்தை கூறுவது அந்தக் கட்சி வரலாற்றிலிருந்து எந்த  ஒரு பாடத்தை யும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

;