headlines

img

ஏறினாலும் ஏறும், இறங்கினாலும் ஏறுமா?

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மற்றும் சமை யல் எரிவாயு விலை உயர்த்தப்படும் போதெல் லாம் அதற்கு சொல்லப்பட்ட காரணம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறது. அதற்கேற்பதான் இங்கும் விலை உயர்த்தப்படு கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய் விலை கடுமையாகச் சரிந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது. 

பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியதன் மூலம் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை நுகர்வோ ருக்கு கிடைக்கவிடாமல் செய்தது மட்டுமல்ல, முன்பு இருந்ததை விட விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டு மக்களுக்கெதிராக இதை விட ஒரு அநீதியை எந்தவொரு அரசும் செய்யாது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 34.72 டாலராக சரிந்த போதும், கலால் வரியை உயர்த்தி விலையையும் உயர்த்தியுள்ளது மத்திய பாஜக அரசு. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காக மட்டுமின்றி எரிபொருள் சந்தையில் நுழைந்து கொள்ளை லாபம் அடித்து ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்க ளின் லாபத்தை பல மடங்கு உயர்த்துவதற்கா கவே மோடி அரசு இவ்வாறு செய்துள்ளது. 

அண்மையில் சமையல் எரிவாயு விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டநிலையில் பெட் ரோல் -டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை உருவாக்குவதாக உள்ளது. 

பெட்ரோல்- டீசல் விலையை அரசு தீர்மா னிப்பதற்கு பதிலாக சர்வதேசச் சந்தை நிலவ ரத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்களே அன்றா டம் தீர்மானித்துக் கொள்ளும் நிலை கொண்டு வரப்பட்டதிலிருந்து அவற்றின் விலை அன்றா டம் உயர்ந்து வருகிறது. சில தினங்களில் பெட் ரோல்- டீசலின் விலையை குறைக்கும் போது பைசா கணக்கில் குறைத்துவிட்டு உயர்த்தும் பொழுது ரூபாய் கணக்கில் உயர்த்துகின்றனர். இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் கச்சா எண்ணெய் விலை சரிந்தநிலையில், கலால் வரி உயர்வு மூலம் விலையை உயர்த்தி மக்களை வஞ்சிக்கிறது மோடி அரசு.

பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து பெட் ரோல் மீதான விலை ரூ.142 சதவீதம் அளவிற்கும், டீசல் மீதான விலை ரூ.419 சதவீதம் அளவிற்கும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 30 சதவீதம் அளவிற்கு விலை குறைப்பு செய் யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடுமையாக விலை உயர்த்தப்படுகிறது. 

பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்க்கை ஸ்தம்பிக்கும் நிலையில் அவர்களை பாதுகாக்க வேண்டிய அரசு அடுத்தடுத்த தாக்கு தலை நடத்துவதன் மூலம் அவர்களது வாழ்வை நிலைகுலையச் செய்ய திட்டமிட்டு செயல்படு கிறதோ  என்ற ஐயப்பாடு எழுகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவின் பலன் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் விலை குறைக்கப்பட வேண்டும்.

;