headlines

img

முடிந்தது மூன்றாண்டு நடந்தது என்ன?

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவரது கட்சியி னரும், கூட்டணி கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆளும் கட்சியான அதிமுகவுக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. சசிகலாவின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி 2017 பிப்ரவரி 16ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். 

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சில எம்எல் ஏக்கள் விலகி நின்றனர். பின்னர் பாஜகவின் உத்தரவுப்படியும், அப்போதைய ஆளுநரின் சமரச ஏற்பாட்டின்படியும் இரு அணிகளும் இணைந்தன. எனினும் இரு அணிகளுக்கு மிடையே பூசலும், பொருமலும் இருந்தே வரு கின்றன. அவ்வப்போது பாஜகவினர் சமரசம் செய்து, தங்களுக்கு எல்லா வகையிலும் சாதக மாகச் செயல்படும் அதிமுக அரசின் ஆயுள் காலத்தை நீடித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி  அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கொறடா உத்தரவுக்கு மாறாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்எல்ஏக்களின் தகுதிநீக்கம் தொடர்பான பிரச்சனை சபாநாயகர் பரிசீலனையில் உள்ள தாக கூறியதையடுத்து இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

மத்திய பாஜக அரசின் தயவுடன்தான் எடப்பாடி பழனிசாமி அரசு மூன்றாண்டுகளை முடித்துள்ளது. இதற்கு நன்றிக் கடனாக அதிமுக அரசு அனைத்து வகையிலும் மத்திய பாஜக அரசுக்கு ஒத்திசைவாகவே செயல்படு கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதர வாக அதிமுகவினர் நாடாளுமன்றத்தில் வாக்க ளித்ததன் மூலம் மாபெரும் வரலாற்றுத் துரோ கத்தை செய்தனர்.

நீட் தேர்வு துவங்கி ஜிஎஸ்டி வரிப் பங்கீடு, இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியில் பாரபட் சம், கீழடி அகழாய்வை தொடர மறுப்பது என தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்த போதும் தட்டிக் கேட்க திராணியில்லாத அரசா கவே அதிமுக அரசு விளங்குகிறது.

மறுபுறத்தில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடு ஆகும். மேலும் முதல்வர், துணை முதல்வர் உட்பட பெரும்பா லான அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. 

போராடும் மக்களை குறி வைத்து தாக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் வண்ணாரப் பேட்டை தடியடி வரை மத்திய அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப மக்களை வதைக்கிறது. மாநிலத்தில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு போலீஸ் ராஜ்ஜியம் நடப்பதுதான் அதிமுக அரசின் சாதனை என்றாகிவிட்டது. இந்த நிலையில் மூன்றாண்டுகள் நீடித்தது என்பதைத் தவிர சாதனை என்று சொல்லிக் கொள்ளும் அள வுக்கு எதுவும் இல்லை. இதை கொண்டாடுவது தான் வேதனை.

;