headlines

img

அதிர்ச்சியளிக்கும் அலட்சியம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதுடன்  உயிரிழப்பும் தொடர்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய மாநில சுகாதா ரத்துறை அலட்சியம் காட்டுவது பொது மக்களி டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜய பாஸ்கர் கடந்த ஞாயிறன்று தமிழகத்தில் 210 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள னர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் மூன்று மடங்கு குறைந் துள்ளது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை  என்று தெரிவித்திருந்தார். ஆனால் செவ்வாயன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் 2951 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு டெங்கு காய்ச்ச லின் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது என தெரி வித்துள்ளார். ஒரு வேளை இந்த இரு நாட்களில் மட்டும் 20 மடங்கு டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கி றதா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. 

அதிலும்  டெங்கு பாதிப்பு தெலுங்கானா, கர் நாடகாவை விட குறைவு என்று நியாயம் கற்பிக்க முயன்றிருப்பது அலட்சியத்தின் உச்சமாகும். தமி ழகத்தில் கடந்த 15 தினங்களில்  டெங்கு காய்ச்சல் பாதிப்பின்மூலம் 10 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆனால் மத்திய அரசு மக்களவையில் தெரி வித்திருக்கும் புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. 2018 ஜூன் மாதம் மட்டும் டெங்குவால் தமிழகத்தில் 98 பேர் பாதிக் கப்பட்டிருந்தனர். ஆனால் 2019 ஜூன் மாதம் மட்டும் தமிழகத்தில் 1100 பேர் பாதிக்கப் பட்டிருந்ததாக தெரிவித்திருக்கிறது. ஆனால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மொத்தத்தில் 210 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று ஒரே போடாக போடுகிறார். 

டெங்குவால் ஏற்படும் மனித உயிரி ழப்புகளையெல்லாம் தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பதாகவும் தெரியவில்லை. அதி காரப்பூர்வமாக பதிவு செய்யவுமில்லை. அரசு மருத்துவமனைகளில்  டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அதனை டெங்கு என பதிவு செய்யக் கூடாது என வாய் மொழி உத்தரவு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின் றனர். இவையெல்லாம் தமிழக அரசு மக்கள் சுகாதாரத்தின் மீது காட்டி வரும் அலட்சியத்தின்  வெளிப்பாடே ஆகும். 

மத்திய, மாநில அரசுகளின் புள்ளி விபரத்தின் படி கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு தமிழ கத்தில் டெங்கு காய்ச்சல் பன்மடங்கு உயர்ந்தி ருக்கிறது. தமிழக அரசு போதுமான தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது தான். மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மிக முக்கியமா னது. ஆனால் கடந்த 3 வருடங்களாக தமிழக அதிமுக அரசு திட்டமிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவது குறிப்பிடத்தக்கது.  இப்போதாவது தமிழக அரசு உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறையை ஒருங்கிணைத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

;