headlines

img

உள்ஒதுக்கீட்டை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு  

 பட்டியலின வகுப்பில் அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வதற்கான உரிமை மாநில அர சுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதி பதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. எனினும் உள் ஒதுக்கீடு முறை செல்லாது என்று 2004ஆம் ஆண்டு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இந்த வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள் ளது. எனினும் இப்போதுள்ள அருந்ததியர்களுக் கான உள்ஒதுக்கீடு தடையின்றி தொடரும் நிலை உருவாகியுள்ளது.  இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்வதற் கான உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பல்வேறு வழக்குகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத் தும். மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் அந்தந்த மாநிலங்களில் உள்ள இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும். அத னடிப்படையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் ஐம்பது சதவீதம் வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல் முறை யீட்டிலும் இந்த தீர்ப்பு கவனத்தில் கொள்ளப் படும் என்று நம்பலாம்.

சாதிய ஒடுக்குமுறை அமைப்பின் காரணமாக அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டை யிலும் அடி மூட்டையாக அமிழ்த்தப்பட்டுள்ள தங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென அருந்ததிய அமைப்புகள் போராடி வந்தன. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து பொதுவெளியில் போராட் டங்களை நடத்திய நிலையில்தான் இந்த கோரிக்கை வலுவடையத் துவங்கியது என்பதை யாரும் மறுக்க முடியாது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதற்காக அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்துக் கொண்டு போராடியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் தலைமையில் பெரும் பேரணி நடத்தப்பட்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநில திமுக அரசு 2009ஆம் ஆண்டில் அருந்ததிய மக்களுக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றி யது. புதிய தமிழகம் கட்சி இந்த உள்ஒதுக்கீட்டை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்ததோடு நீதிமன்றத் திற்கும் சென்றது.  இந்நிலையில் உள்ஒதுக்கீடு வழங்குவதற் கான உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனும் வகைப்பாடு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடு போன்றவையும் பாதுகாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. உள்ஒதுக்கீடு தொடர் பான வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வா யத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது.

;