headlines

img

ஓநாயின் அமைதி வேடம்

ஓநாயின் அமைதி வேடம் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற  ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்று திரும்பும் வழியில், தென்கொரிய அரசின் மூலமாக திடீரென அழைப்பு விடுத்து, பன்முஞ்சம் எல்லை பகுதி யில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்கை ஞாயி றன்று திடீரென சந்தித்து மகிழ்ந்திருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கிம்மை சந்தித்து ஒரு ‘ஹலோ’ சொல்லி விட்டு போகலாம் என்று வந்தேன் என வழக்கம் போல வேடிக்கையாக குறிப்பிட்டிருக்கிறார் டிரம்ப். ஆனால் இந்த சந்திப்பு வெறும் வேடிக்கை யல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சோசலிச வடகொரியாவுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற இடத்திற்கு வருவதும், அதில் பின்வாங்குவதும், மீண்டும் மிரட்டிப்பார்ப்பதும், பலனளிக்காமல் மீண்டும் வேறு வழியின்றி பேச்சுவார்த்தைக்கு வருவதுமாக இருக்கிறார் டொனால்டு டிரம்ப். சிங்கப்பூரில் இந்த இரு வருக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பில் நம்பிக்கை பூத்தது. தன்மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா சம்மதிக்குமானால் அணு ஆயுத திட்டங்களை முற்றாக கைவிட சம்மதிப்பதாக வடகொரியா கூறியது. சரியென்று சொல்லிவிட்டு சென்றார் டிரம்ப். ஆனால் வெள்ளை மாளிகைக்கு சென்று அமர்ந்தவுடன் மாற்றி பேசினார். கிம் மசிய வில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கான சூழல் எழுந்து வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்தார்கள். வடகொரியா மீதான தடைகளை எந்த விதத்திலும் விலக்கிக் கொள்வதற்கு டிரம்ப் தயாராக இல்லை. பேச்சுவார்த்தை தோல்விய டைந்தது. இப்போது மீண்டும் டிரம்ப் தாமாக முன்வந்து சந்திப்பது போல் சந்தித்திருக்கிறார். வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு மேலாக - சுதந்திரம் அடைந்த அந்த நிமிடத்திலிருந்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான துருப்புக் கள், அதிநவீன ஆயுதங்களோடு எந்த நேரமும் தாக்கக்கூடும் என்ற ஆக்கிரமிப்பு மிரட்டலின் பிடியிலேயே ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் அது சோசலிச வடகொரியா தான். எந்த நேரமும் தாக்குவதற்கு தனது படைகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டே, வட கொரியாவுடன் அமைதி பேச்சில் வெற்றி பெற நினைக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.  படைக்குவிப்பு மட்டுமல்ல, உலகிலேயே மிகக் கடுமையான, மிக நீண்டகால பொருளாதார தடை களை அமெரிக்க ஏகாதிபத்தியம், வடகொரியா மீது ஏவி விட்டுள்ளது.  2008 உலகப் பொருளாதார நெருக்கடி துவங்கிய பிறகு அதிலிருந்து மீள்வதுபோல தெரிந்தாலும் மீள முடியாமல் திணறித் தவிக்கிறது முதலாளித்துவம். மீளும் முயற்சியில் வெறிகொண்டு லாப வேட்டையில் இறங்குகிறது. ஆனால் சோசலிச சீனா, ரஷ்யா, ஈரான், வெனி சுலா உட்பட உலகின் பெருவாரியான நாடுகள், உலக முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்கு இரையாக முடியாது என எதிர்த்து மோது கின்றன. ஜி 20 மாநாட்டில் இந்த மோதல் வெளிப் படையாகவே நடந்துள்ளது. தானடித்த மூப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தான் விரும்பிய வேகத்தில் நகர முடியவில்லை. எனவே மீண்டும் அமைதி வேடம் தரிக்கிறார். கிம் ஜோங் உன்- னுக்கு இந்த வேடம் நன்றாகவே புரியும்.

;