அடாவடி ஆணையமும் அராஜக ஒன்றிய அரசும்
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர் பட்டியல் முறைகேட்டைக் கண்டித்தும், இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலை நகர் தில்லியில் நடத்திய பேரணியை தடுத்து நிறுத்தி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல திட்ட மிட்டிருந்த 300க்கும் மேலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன் மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணை யம் வரை சென்று முறைகேடு குறித்து முறையிட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட உரிமை இல்லையா?
இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, வங்கம், மராத்தி என இந்தியா வின் அனைத்து மொழிகளிலும் எம்.பி.,க்கள் முழக் கமிட்டுள்ளனர். ஆனால் அடக்குமுறை என்பது மட்டுமே ஒன்றிய அரசின் மொழியாக உள்ளது.
நரேந்திர மோடியின் நெருங்கிய சகாவான அதானியின் ஊழல் குறித்து விசாரிக்கக் கோரி, அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேரணியாகச் செல்ல முயன்ற போதும் தடுத்து நிறுத்தப்பட்டனர். தில்லி காவல்துறை சமீபத்தில் வங்கமொழியை அந்நிய மொழி என்று அர்த்தப்படுத்தியதும் சர்ச்சைக்குள் ளானது. ஒன்றிய அரசின் பொறுப்பில் உள்ள தில்லி காவல்துறை மீதான குற்றப்பத்திரிகை நீண்டுகொண்டே போகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
மறுபுறத்தில் சுயேச்சையாகவும், சுதந்திரமா கவும் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் தன் னுடைய நன்மதிப்பை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறது. பீகார் மாநில வாக்காளர் பட்டி யலிலிருந்து 65 லட்சம் பேரை நீக்கியதை ஒப்புக் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், ஆனால் அந்த விவரத்தை வெளியே சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் பிடிவாதம் பிடிக்கிறது.
இந்த விவரங்களை வெளியிடுமாறு கடந்த 9ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்வாறு வெளியிட முடியாது என்று கூறுவதோடு, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துப வர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் உச்சநீதிமன்றத் தில் கூறியுள்ளார்.
பாஜக பரிவாரத்தின் விருப்பத்திற்கேற்ப செயல் பட்டு வரும் தேர்தல் ஆணையர்களுக்குத்தான் அபராதம் விதிக்க வேண்டிய நிலை உள்ளது. மறு புறத்தில் வாக்குப்பதிவு மோசடிக்கு உடந்தையாக இருந்த தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியி டம் பிரமாணப் பத்திரம் கேட்கிறது தேர்தல் ஆணையம். இந்த ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்ப இந்திய குடிமக்கள் அனைவ ருக்கும் உரிமை உண்டு. பதிலளிக்க வேண்டிய ஆணையம் பாஜக தரப்பு போல மாறிச் செயல் படுவது நல்லதல்ல.