ஒவ்வொரு பெண்ணும் 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படிப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அந்த சமூகம் முற்றிலுமாக அழிந்து விடும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
பெண்கள் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. அப்படியிருக்கும் போது மோகன் பகவத் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என எப்படிக் கூற முடியும்? அவ்வ ளவு ஏன் கண்டிப்பாக அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியுமா? அதனை மோகன் பகவத்தும், ஆர்எஸ்எஸ் தத்துவமும் ஏற்றுக்கொள்ளுமா? பெண்களைப் பிள்ளை பெறும் கருவிகளாகப் பார்க்கும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அமலாக வேண்டும் என்பதுதான் மோகன் பகவத்தின் அடிப்படை நோக்கமாகும்.
முதலில் இந்தியாவில் பிறக்கும் குழந்தை களின் நிலை எப்படி இருக்கிறது என ஆர்எஸ் எஸ்க்கு தெரியுமா? ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 38.9 சதவிகித குழந்தைகள் அதா வது மூன்றில் ஒரு குழந்தை தேவையான அளவு வளர்ச்சி பெறவில்லை என ஒன்றிய அரசே கூறு கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்விற் கான அமைச்சர் சவிதா தாக்கூர் நாடாளுமன்றத் திலேயே தெரிவித்துள்ளார். உலக பட்டினி குறி யீட்டில் 127 நாடுகளில் இந்தியா 105 ஆவது இடத்தில் இருக்கிறது. முதலில் பட்டினியால் வாடும் இந்திய மக்களைப் பற்றி என்றாவது ஆர்எஸ்எஸ் கவ லைப்பட்டிருக்கிறதா? இருக்கும் குழந்தைக ளையே காப்பாற்ற வழியில்லாத நிலையில் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என கூறு வது எப்படி அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்?
மக்கள் தொகை அதிகமாக இருந்தால், அதிக மான பொருட்களை உற்பத்தி செய்யலாம். அது அதிக நுகர்விற்கு வழி வகுக்கும். அதன் மூலம் பொ ருளாதாரமும் வளர்ச்சியடையும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் அதில் உண்மை யில்லை. உதாரணமாக 1966 இல் ஜப்பானின் பிறப்பு விகிதம் 1.6 சதவிகிதமாக இருந்தது. தற்போது மேலும் குறைந்து 1.26 சதவிகிதமாக இருக்கிறது. அதனால் அந்த நாடு பொருளாதார வளர்ச்சி யின்றி வீழ்ச்சியடைந்து விட்டதா?
இந்தியாவில் தற்போதிருக்கும் வேலை யின்மை மற்றும் சமூக பொருளாதார நிலையில் மேலும் மக்கள் தொகை அதிகரித்தால், வறு மைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக் கையே அதிகரிக்கும். ஏற்றத்தாழ்வு மேன்மேலும் அதிகரிக்கும். கருவுறுதல் விகிதத்தை வைத்து பொருளாதார வளர்ச்சியை இணைத்துப் பேசு வது கடைந்தெடுத்த ஆணாதிக்க சிந்தனை யின் வெளிப்பாடே ஆகும். இது ஆடத்தெரியாத வர்க்கு தெரு கோணல் என்பது போன்றதாகும்.
பிறப்பு விகிதம் அதிகரித்தால்தான் பொருளா தாரம் வளரும் என்பது, மோடி அரசின் பொருளா தார தோல்வியை மடைமாற்றம் செய்வதற்கான கடைந்தெடுத்த ஆர்எஸ்எஸ் சின் உருட்டு. அதனை ஒரு போதும் இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள்.