இந்திய பொருளாதாரமே அதலபாதாளத்திற்கு சென்றாலும் பரவாயில்லை. தேசத்தின் சொத்துகளை தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு கூறுபோட்டு பங்கு வைப்பதில் மோடி அரசு விடாப்பிடியாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் பணி தீவிரமாகியிருக்கிறது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா. இந்தியன்ஓவர்சீஸ் வங்கி. பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகளை தனியாருக்கு விற்கலாம் என நிதி அயோக், ஒன்றிய அமைச்சரவை செயலாளருக்கு பரிந்துரை செய்திருக்கிறது. மக்களின் ஒட்டுமொத்த சேமிப்பு பணத்தையும் கார்ப்பரேட்களுக்கு தூக்கி கொடுப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது.உதாரணமாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், 2004-14 ஆண்டு காலத்தை விட கடந்த7 ஆண்டுகளில் வங்கி முறைகேடுகள் எண்ணிக்கை, நிதி இழப்பு இரண்டுமே 100 சதவிகிதம்அதிகரித்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் ரூ.6 லட்சத்து 32 ஆயிரம் கோடி. கார்ப்பரேட்களுக்கு வாராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 90 சதவிகித கார்ப்பரேட்கள் மோடிக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் நெருக்கமான நிதி அளிக்கும் கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக மோடிக்கு மிக நெருக்கமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலோக் டெக்ஸ்டைல் நிறுவனம் 30 ஆயிரம் கோடி கடன் பெற்றுகட்டவில்லை. அந்நிறுவனத்திற்கு சொத்தா இல்லை. அந்நிறுவனத்திடம் வசூலிப்பதற்கு மாறாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் விதியையே மாற்றி 25 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது. ஆனால் மறுபுறம் அதே காலத்தில் குறைந்த பட்ச வைப்பு தொகை வைக்கவில்லை என சாதாரண எளிய மக்களிடமிருந்து ரூ.1800கோடி பறிக்கப்பட்டது. பொதுத்துறை வங்கிகளில் கடனைப் பெற்று அதைத் திரும்ப செலுத்த, வசதியிருந்தும் திரும்ப செலுத்தாத 2,426 பேரின் கடன்தொகை மட்டும் ரூ.1.47 லட்சம் கோடி.
இவர்களின் பட்டியலைக்கூட மோடி அரசு வெளியிட மறுக்கிறது. இதுதான் மோடி அரசின் ஊழலற்ற நிர்வாகத்தின் லட்சணம்.1947 முதல் 1969 வரை 500க்கும் மேற்பட்ட தனியார்வங்கிகள் திவால் ஆனது. மக்களின் சேமிப்பு பணம் கேள்விக்குறியாக மாறியது. அதன் பின்னரே 14 பெரிய தனியார் வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டது. அதேபோல் 1980 ல் 200 கோடிக்கும் மேல்முதலீடு உடைய 6 வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டது. அதன் பின்னரே இந்தியாவில் மக்களின்சேமிப்பு பணத்திற்கு பாதுகாப்பு உறுதியானது. மோடி பிரதமராக பதவியேற்ற போது 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. தற்போது வெறும்12 வங்கிகள் மட்டுமே இருக்கிறது. இணைப்பு என்ற பெயரில் 15 வங்கிகளை ஒழித்து விட்டனர். வங்கிகள் இணைப்பின் காரணமாக இதுவரை 5 ஆயிரம்அரசு வங்கி கிளைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் இதே காலத்தில் 22 க்கும் மேற்பட்டதனியார் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக, தேசத்திற்கு செய்யும் பச்சை துரோகம் ஆகும்.