headlines

img

ஏன் இந்த வன்மம்?

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை யும் மீறி இந்த மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது.இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.

சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மற்றும் இந்தி யாவில் அகதிகளாக குடியேறியுள்ள இலங்கைத் தமிழ் மக்களின் குடியுரிமையை குறிவைத்து வன்மத்து டன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவை முஸ்லிம்களுக்கு எதிரா கத்தான் கொண்டு வருகிறோம் என்பதை அமித் ஷாவே ஒப்புக்கொண்டுள்ளார். இந்த மசோதா குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அவர், அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி கள், புத்த, சமண மதத்தவர்கள் தங்களது குடியுரி மை குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை என்று அவர் கூறினார். இதில் முஸ்லிம்களை கவ னமாக அவர் தவிர்த்ததன் நோக்கம் அண்டை நாடுகளிலிருந்து குடியேறிய அவர்களின் குடியுரி மையை பறித்து அவர்களை நாடற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான்.

அசாமில் குடியேறியவர்கள் குறித்து கணக் கெடுத்து தகுதியானவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் மோடி அரசு அதை நாடு முழுவதும் விஸ்தரிக்க முயற்சிக்கிறது.  கடந்த 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியு ரிமை சட்டத்தின்படி அண்டை நாடுகளான ஆப் கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து குடியேறிய- 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. 

தற்போது அமித்ஷா கொண்டு வந்துள்ள மசோ தாவில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்து பல ஆண்டுகளாக முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

மோடி அரசு இரண்டாவது முறையாக பதவி யேற்றதிலிருந்து சிறுபான்மை முஸ்லிம் மக்களுக் கெதிராக பல்வேறு தாக்குதல்கள் தொடுக்கப் பட்டு வருகின்றன. முத்தலாக் தடைச் சட்ட மசோதா, ஜம்மு- காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்து, யூனியன் பிரதேசங்களாக உடைத்து அரசியல் சட்டத்தில் 370ஆவது பிரிவை ரத்து செய்தது என தொடர் தாக்குதலின் அடுத்தக் கட்டமாக முஸ்லிம்களை குறிவைத்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. பாபர் மசூதி பிரச்சனையிலும் கூட சிறுபான்மை மக்கள் நிர்ப்பந்தமாக அச்சுறுத்தப்பட்டனர்.  இந்த நிலையில், லட்சக்கணக்கான முஸ்லிம் மக்களின் குடியுரிமையை மறுக்கும் இந்த மசோதா முற்றிலும் அநீதியானதாகும். ஒரு பகுதி மக்களுக் கெதிராக வன்மத்துடன் நடந்து கொள்ளும் மோடி அரசு மக்களை நிரந்தரமாக பிரித்துவைத்து அதி காரத்தை தக்கவைத்துக் கொள்ள மோடி முயல்கிறது என்பதே கசப்பான உண்மையாகும்.