மராட்டிய மாநிலத்தில் கடும் வறட்சி நிலவும் பகுதிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.1300 கோடிஒதுக்கப்பட்டிருந்தபோதும் திரும்ப வசூலிக்க முடியாது என்று காரணம் கூறி விவசாயிகளுக்கு கடன் தர வங்கிகள் மறுக்கின்றன. இதனால் தனியார் வங்கிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் விவசாயிகள் கடன் வலையில் சிக்கி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைப்பதிலும் பெரும் சிரமம் உள்ளது. கல்விக் கடன்பெற்று படிப்பை முடிக்கும் மாணவர்களிடம் வட்டி போட்டு கடனை வசூலிக்கும் பொறுப்பைஸ்டேட் வங்கி போன்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைப்பதால் அவர்களின் சித்ரவதையால் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிலர் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
மாணவர்களிடம் கடனை வசூலிக்க பொறுப்பேற்றுக் கொள்ளும் ரிலையன்ஸ் போன்றகார்ப்பரேட் நிறுவனங்கள்தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரும் தொகையை கடனாக பெற்று திரும்பச் செலுத்தாமல் ஏப்பம் விடுகின்றன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற்று பெரு முதலாளிகள் திரும்பச் செலுத்தவில்லையென்றால் அது வராக் கடன் என்றுபட்டியலில் சேர்க்கப்படுகிறது. அவர்களது கடன்மொத்தமாக தள்ளுபடியும் செய்யப்படுகிறது. வங்கிகளை திவாலாக்கும் இந்த பெரு முதலாளிகளின் பெயர்களை வெளியிடக்கூட வங்கிகள் மறுக்கின்றன. அண்மையில் தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில் ரிசர்வ் வங்கியும் பதில் சொல்லும் கடமை கொண்டது; வராக்கடன் பட்டியலை வெளியிடுமாறு வங்கிகளை அறிவுறுத்த வேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உண்டு என உச்சநீதிமன்றம் கூறியது.
ஆனாலும் மோடி அரசு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட மறுப்பதால் கடன் வாங்கி ஏப்பம் விட்ட முதல் நூறு பெரு முதலாளிகளின் பட்டியலைக்கூட வெளியிட முடியவில்லை. இதன் பின்னால் இருப்பது மோடி அரசுதான் என்பதைபுரிந்துகொள்வது சிரமம் அல்ல.மோடி ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகளில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத தொகை ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. இந்தத்தொகை 2.5 லட்சம் கோடியிலிருந்து 10.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் குஜராத்தில் உள்ளன. பணமதிப்பு நீக்கத்தின்போது அமித்ஷா மற்றும் அவரது மகன் உட்பட பெரும் தொகையை சுருட்டினர். வராக்கடன் பட்டியலிலும் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதேபோல மோடி அரசுக்கு நிதியுதவி வழங்கும் அம்பானி, அதானி போன்ற பெரும்முதலாளிகளையும் தப்பியோடிய தன்னுடையநண்பர்களையும் பாதுகாக்கத்தான் மோடி அரசுரிசர்வ் வங்கியை தடுத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சியில் தொடர்ந்தால் வங்கிகள் போல நாட்டையும் திவாலாக்கி விடுவார்கள்.