headlines

img

தீவு நாடு சொல்லும் பாடம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக உருவெ டுத்தது. இன்னமும் கூட அந்த நாடு பொருளா தார நெருக்கடியிலிருந்தோ, அரசியல் நெருக்க டியிலிருந்தோ முற்றாக விடுபட்டுவிடவில்லை. இப்போது அங்கு நடைபெற்றிருப்பது அனைத்தும் தற்காலிக ஏற்பாடே. அடிப்படை பிரச்சனை நீறு பூத்த நெருப்பாக தொடரவே செய்கிறது. 

இந்நிலையில்  ஐ.நா. சபை வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அந்த அறிக்கையில் இலங்கையில் கடந்த கால, தற்போதைய மனித உரிமை மீறல்கள் தண்டிக்கப் படாமல் விடப்பட்டது, பொருளாதார குற்றங்கள்,  ஊழல் ஆகியவை அந்நாட்டின பொருளாதாரச் சரிவுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள கொடூ ரமான பாதுகாப்புச் சட்டங்களை பயன்படுத்தி போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டு மென்று கூறப்பட்டுள்ளது. மேலும் ராணுவ மயமாக்கலை கைவிட்டு பாதுகாப்புத்துறை சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது குறிப்பாக இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து எந்த ஒரு நியாயமான விசார ணைக்கும் ராஜபக்சேக்கள் அரசு தயாராக யில்லை. மாறாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த வாக்குறுதிகளையும் அப்பட்டமாக மீறியது.

இலங்கையில் நிகழ்ந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்பு நிறுத்துவதில் அடுத்தடுத்த அரசுகள் தோல்வியடைந்துவிட்டன என்று ஐ.நா. அறிக்கை பொருத்தமாகவே சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கையில் நிகழ்ந்த இனஒதுக்கலே அந்தநாட்டை உள்நாட்டுப் போரில் தள்ளியது. பெரும்பான்மை பேரினவாதம் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தூண்டிவிடப்பட்டது. இலங்கை ஆட்சியாளர்களே இதை முன்னின்று செய்தனர். 

தமிழ்மக்களின் நியாயமான உரிமைகள் கூட கருத்தில் கொள்ளப்படவில்லை. அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டன. மொழி உரிமை, வேலை வாய்ப்பு பின்னுக்கு தள்ளப்பட்டது. இறுதிக்கட்டப் போரின்போது அப்பட்டமான மனிதஉரிமை மீறல்கள் நிகழ்ந்தன.

இதுகுறித்த நியாயமான விசாரணை எதுவும் நடைபெறவில்லை. ராணுவத்திற்கு அதீத மாக செலவு செய்யப்பட்டது. வளர்ச்சித் திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.நவீன தாராளமய மாக்கல் ஆட்சியாளர்களால் கண்மூடித்தனமாக திணிக்கப்பட்டு ஊழல் அதிகரித்தது. இனி யேனும் இலங்கை அரசு தன்னுடைய தவறை  சரி செய்ய வேண்டும். இந்தியா உள்பட, பகைமை யை தூவிவிட்டு மக்களை பிளவுபடுத்த முயலும் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இலங்கை ஒரு பாடமாகும்.

;